அண்ணாமலை: இங்கேயும் ஒரு ஷிண்டே; ஸ்டாலின்: அக்கப்போர் அரசியல் வேண்டாம் பாஜக-திமுக எதிரடி, பதிலடி

சென்னை: தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை சிவ­சே­னா­வை­யும் திமு­க­வை­யும் ஒப்­பிட்டுப் பேசிய பேச்சு அர­சி­ய­லில் பெரும் பர­பரப்பைக் கிளப்பி இருக்­கிறது.

அதன் கார­ண­மாக அந்த இரண்டு கட்­சி­க­ளுக்­கும் இடை­யில் கார­சா­ர­மான சொற்­போர் மூண்டு இருக்­கிறது. தமிழ்­நாட்டை ஆளும் திமுக தேர்­தல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை என்று பாஜக மாநி­லம் முழு­வ­தும் உண்­ணா­விரதப் போராட்­டத்தை நடத்­தி­யது.

சென்­னை­யில் நடந்த போராட்­டத்­தில் பேசிய தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை, "மகா­ராஷ்­டி­ரா­வின் முதல்­வ­ராக இருந்த சிவசேனா தலை­வர் உத்­தவ் தாக்­கரே தன் மக­னுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்து அமைச்­ச­ர­வை­யில் கொண்டு வந்­த­தைப்போல தமி­ழ­கத்­தில் முத­லமைச்­ச­ரின் மகன் உத­ய­நி­திக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்கப்­ப­டு­கிறது.

"உத­ய­நிதி அர­சி­ய­லுக்கு வந்­தால் தமிழ்­நாட்­டில் திமு­க­வில் இருந்­தும் ஓர் ஏக்­நாத் ஷிண்டே புறப்­படு­வார்," என்று தெரி­வித்திருந்தார்.

இதுபற்றிக் கருத்து கூறிய திமுக தரப்­பி­னர், தமி­ழக பாஜக தலை­வரைக் கடு­மை­யா­கக் குறை­கூ­றி­னர். பாஜக தலை­வர் விளம்­ப­ரத்­துக்காக கண்­ட­படி பேசு­கி­றார் என்­றும் தமி­ழக பாஜ­கவைப் பொறுத்­த­வரை அது பிள்ளை பிடிக்­கிற கட்சி­யாக இருக்­கிறது என்­றும் திமுக அமைப்­புச் செய­லா­ளர் ஆர் எஸ் பாரதி கூறி­னார்.

இத­னி­டையே, ஓராண்டு காலம் நடந்து முடிந்­துள்ள தமிழ்­நாட்­டின் திமுக ஆட்சி இந்­தி­யா­வுக்கே முன்­மா­தி­ரி­யா­கத் திகழ்­வதாக முதல்­வர் ஸ்டா­லின் தொண்­டர்­க­ளுக்கு எழு­திய கடி­தத்­தில் தெரி­வித்­தார்.

அக்­கப்­போர் விமர்­ச­னங்­க­ளைப் புறம் தள்­ளி­விட்டு ஆக்­கப்­பூர்­வ­மான பணியைத் திமுக ஆட்சி தொடர்ந்து மேற்­கொள்­ளும் என்றார் அவர்.

தன் ஆட்­சி­யின் ஓராண்டு கால சாத­னையைப் பெரும் பட்­டி­ய­ல் மூலம் அவர் தெரி­வித்­தார்.

நிர்­வா­கத்­தைப் பொறுத்­த­வரை ஒழுங்­கீ­ன­மும் முறை­கே­டும் தலை­தூக்­கி­னால் சர்­வா­தி­கா­ரி­யாக மாறி நட­வ­டிக்கை எடுக்க தான் தயங்­கப்­போ­வ­தில்லை என்­றார் முதல்­வர்.

இவ்வேளையில், காரைக்­கு­டி­யில் உரை­யாற்­றிய தமி­ழக பாஜக மூத்த தலை­வர் ஹெச். ராஜா, மகா­ராஷ்­டி­ராவை மன­தில்­கொண்டு தமி­ழக முதல்­வர் எச்­ச­ரிக்­கை­யு­டன் நடந்து கொள்ள வேண்­டும் என்றும் தனித் தமிழ்­நாடு தேவை என்று பேசிய திமுக முன்­னாள் மத்­திய அமைச்சர் ஆ ராசா மீது நட­வடிக்கை எடுக்க வேண்­டும் என்றும் கூறினார்.

இந்த விவ­கா­ரம் பற்றி திரு­நெல்­வே­லி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய பாஜக தமி­ழக சட்­ட­மன்­றத் தலை­வர் நயினார் நாகேந்­தி­ரன், ஆந்­தி­ரா­வைப் போல தமி­ழ­கத்­தை­யும் இரண்­டா­கப் பிரிக்க வேண்­டும் என்­றும் பிர­த­மர் மோடி நினைத்­தால் இதைச் செய்து முடிக்­க­லாம் என்­றும் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, நெல்­லை­யில் பாஜக நிர்­வா­கி­கள் கூட்­டத்­தில் பேசிய மத்­திய அமைச்­சர் வி கே சிங் தமி­ழ­கத்தை இரண்­டா­கப் பிரிக்­கும் திட்­டமில்லை என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!