அதிமுக பொதுக்குழுவை கூட்ட தடையில்லை: உச்ச நீதிமன்றம்

புது­டெல்லி: தமிழ்­நாட்­டின் முக்­கிய எதிர்க்­கட்­சி­யான அதி­மு­க­வின் பொதுக்­குழுக் கூட்­டத்தை ஜூலை 11ஆம் தேதி நடத்­த­லாம் என்று உச்ச நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­தது.

அதே­வே­ளை­யில், அதி­மு­க­வின் முக்­கிய இரண்டு தலை­வர்­களில் ஒரு­வ­ரான ஓ. பன்­னீர் செல்­வம் தரப்­பில் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் தொட­ரப்­பட்டு உள்ள நீதி­மன்ற அவ­ம­திப்பு விசா­ர­ணைக்கு இடைக்­கா­லத் தடையை உச்ச நீதி­மன்­றம் விதித்­துள்­ளது.

தமி­ழக சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அதி­முக தோல்­வியை அடுத்து அந்­தக் கட்­சி­யில் உட்­கட்­சிப் பிரச்­சினை கொஞ்­சம் கொஞ்­ச­மாக விஸ்­வ­ரூ­பம் எடுத்­து­விட்­டது.

கட்­சி­யில் ஒற்­றைத் தலைமை பிரச்­சினை இப்­போது தலை­தூக்கி இருக்­கிறது. முன்­னாள் முதல்­வர்­க­ளான எடப்­பாடி பழ­னி­சா­மிக்­கும் பன்­னீர் செல்­வத்­துக்­கும் இடை­யில் ஒட்ட முடி­யாதபடி உறவு கசந்து­விட்­ட­தா­கத் தெரிகிறது.

இந்த நிலை­யில், கட்­சி­யின் பொதுக்­குழுக் கூட்­டத்தைக் கூட்டி அதில் எடப்­பா­டியை ஒற்­றைத் தலை­ வ­ரா­கத் தேர்ந்­தெ­டுக்க முயற்சி­கள் முடுக்­கி­வி­டப்­பட்டு இருக்­கின்­றன.

அதை எதிர்த்து பன்­னீர் செல்வம் தரப்பு பொதுக்­கு­ழுக் கூட்­டத்தை நடத்­த­வி­டா­மல் தடுக்க வியூ­கம் வகுத்து வரு­கிறது.

இரு தரப்­புமே மாறி மாறி நீதி­மன்­றத்தை நாடி வரு­கின்­றன.

இவ்­வே­ளை­யில், உச்ச நீதி­மன்றம் ஜூலை 11ஆம் தேதி பொதுக்­குழுக் கூட்­டத்தை நடத்­த­லாம் என்று எடப்­பாடி பழ­னி­சா­மிக்கு ஆத­ர­வாக தீர்ப்­ப­ளித்து உள்­ளது.

மொத்­த­மா­கப் பார்க்­கை­யில், இது­வ­ரை­ கட்­சி­யி­லும் சட்ட நட­வடிக்­கை­க­ளி­லும் பன்­னீர் செல்­வத்­துக்­குப் பெரும் பின்­ன­டைவு ஏற்­பட்டு இருப்­ப­தாக கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கி­றார்­கள்.

பொதுக்­கு­ழுக் கூட்­டத்தை நடத்­த­லாம் என்று உச்ச நீதி­மன்றமே அனு­மதி வழங்கி இருப்­ப­தால் ஜூலை 11ஆம் தேதி எடப்­பாடி பழனி­சா­மியை அதி­முக பொதுச் செய­லா­ள­ரா­கத் தேர்வு செய்­து­வி­ட­லாம் என்று அவ­ரு­டைய தரப்­பு பெரு­மகிழ்ச்­சி­யில் திளைக்­கி­றது.

இந்த நிலை­யில், ஜூலை 11 பொதுக்­கு­ழுக் கூட்­டத்­துக்குத் தடை விதிக்­கு­மாறு கோரி ஓ. பன்­னீர் செல்­வம் தாக்­கல் செய்த ஒரு மனு இன்று சென்னை உயர் நீதி­மன்றத்­துக்கு விசா­ர­ணைக்கு வரும் என்று தக­வல்­கள் தெரி­வித்­தன.

இவ்­வே­ளை­யில், ஜூலை 11ஆம் தேதி நடக்­கும் அதி­முக பொதுக்­கு­ழுக் கூட்­டத்­தில் ஆர்.எப்.ஐ.டி. என்ற அதி­ந­வீன அடை­யாள அட்டை தொழில்­நுட்­பத்­தைப் பயன்­படுத்தி அழைக்­கப்­பட்­ட­வர்­கள் மட்டுமே கலந்­து­கொள்­கி­றார்­கள் என்­பதை உறு­திப்­ப­டுத்த எடப்­பாடி தரப்பு முழுமூச்சாக முயன்று வரு­வதாக தகவல்கள் கூறின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!