இடமில்லை: ஒரு வகுப்பறையில் இரண்டு ஆசிரியர்கள்

சேலம்: தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­களில் உள்ள அர­சுப் பள்­ளி­களில் ஆசி­ரி­யர்­கள் பற்­றாக்­குறை நில­வு­கிறது எனில், சேலம் மாவட்­டம், சீல­நாய்க்­கன்­பட்டி பகுதி அர­சுப் பள்­ளி­யிலோ போது­மான வகுப்­

ப­றை­கள் இல்லை.

அத­னால், அப்­பள்­ளி­யில் ஒரே வகுப்­ப­றையை இரண்­டா­கப் பிரித்து, மாண­வர்­களை அமர வைத்து தமிழ் வழி, ஆங்­கில வழி மாண­வர்­க­ளுக்­குப் பாடம் நடத்­து­கி­றார்­கள்.

இரண்டு ஆசி­ரி­யர்­களும் ஒரே நேரத்­தில் உரக்­கப் பாடம் நடத்­து­வ­தால், கவ­னம் செலுத்த முடி­ய­வில்லை என்­கி­றார்­கள் மாண­வர்­கள்.

ஐந்து முதல் பத்­தாம் வகுப்பு வரை சுமார் 220 மாண­வர்­கள் படிக்­கும் இந்­தப் பள்­ளி­யில் நான்கு வகுப்­ப­றை­கள் மட்­டுமே உள்­ளன. ஆசி­ரி­யர்­க­ளின் எண்­ணிக்கை 12.

அத­னால் நான்கு வகுப்­

ப­றை­களை இரண்­டா­கப் பிரித்து, கரும்­ப­ல­கை­யை­யும் இரண்டு ஆசி­ரி­யர்­கள் கோடு போட்டு பிரித்­துக் கொண்டு, பாடம் நடத்­து­கி­றார்­கள்.

ஏழாம் வகுப்பு மாண­வர்­க­ளுக்கு பள்­ளி­யின் பின்­பு­றம் உள்ள சமை­யல்­கூ­டம் அருகே தரை­யில் அமர வைத்து பாடம் நடத்­து­கி­றார்­கள். மரத்­த­டி­யி­லும்கூட வகுப்­பு­ நடத்­தப்­ப­டு­கிறது.

மழை நாள்­களில் மாண­வர்­கள் பெரும் அவ­திக்கு ஆளா­கி­றார்­கள். இதை­ய­டுத்து கூடு­தல் வகுப்­ப­றை­கள் கட்­டித் தரவேண்­டும் என இப்­

ப­குதி மக்­கள் அர­சி­டம் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் சேலம் மாந­க­ராட்­சி­யின் துணை மேய­ரான சார­தா­தேவி அண்­மை­யில் இப்­பள்­ளிக்கு நேரில் வந்து ஆய்வு மேற்­கொண்­டார்.

அப்­போது கூடு­தல் கட்­ட­டங்­களும் வகுப்­ப­றை­களும் கட்­டித்­தர வேண்­டும் என கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. அவ­ரும் உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­தாக உறுதி அளித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!