மா.சுப்பிரமணியன்: புதிய கட்டுப்பாடுகள் எதுவும் தேவையில்லை

கோவை: தமி­ழ­கத்­தில் கொரோனா தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த புதிய கட்­டுப்­பாடு விதிக்க வாய்ப்­பில்லை என்று மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

கோவை­யில் செய்­தி­யா­ளர்­களிடம் பேசிய அவர், தற்­போது தமி­ழ­கத்­தில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் ஐந்து விழுக்­காட்­டி­னர் மட்­டுமே மருத்து­வ ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தால் புதிய கட்­டுப்­பா­டு­களை விதிக்­க­வேண்­டிய அவ­சி­யம் எழ­வில்லை என்று குறிப்­பிட்­டார்.

தமி­ழ­கத்­தில் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 95 விழுக்­காட்­டி­னர் வீடு­களில் தனி­மைப்படுத்­தப்­பட்­டுள்­ளதாகவும் அனை­வரும் சுகா­தா­ரத்­துறை அலு­வ­லர்­களால் கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­வதா­க­வும் அமைச்­சர் கூறி­னார்.

"யாருக்­கும் பெரி­தாக பாதிப்பு இல்லை. இலேசான அறி­கு­றி­களே தென்­ப­டு­கின்­றன.

தற்­போது பர­வும் தொற்­றா­னது குடும்­பத்­தில் ஒரு­வருக்கு வந்­தால் அனை­வ­ருக்­கும் பர­வு­கிறது.

"ஆர்­டி­பி­சி­ஆர் ­ப­ரி­சோ­த­னை­யில் 10 விழுக்­காட்­டிற்­கும் மேற்­பட்­டோ­ருக்குத் தொற்­று­ உ­று­தி­செய்­யப்­பட்­டாலோ, தொற்­றால் பாதிக்­கப்­படு­ப­வர்­களில் 40%க்கும் மேல் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டாலோ மட்­டுமே கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­படும்," என்­றார் அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன்.

இதற்­கி­டையே, மாநி­லம் முழு­வதும் பொது இடங்­களில் முகக்­க­வ­சம் இல்­லா­மல் நட­மா­டு­கி­ற­வர்­களுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்டு வரு­கிறது.

தின­மும் ஆயி­ரக்­க­ணக்­கானோர் இவ்­வாறு சிக்­கு­கின்­ற­னர்.

முகக்கவசம் இல்லாமல் தொற்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்காது என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!