பிரிக்க முயன்று தோற்றுப்போன மரணம்

தஞ்சை: கண­வர் இறந்த துக்­கம் தாளா­மல் மனை­வி­யும் மர­ண­

ம­டைந்த சோகச் சம்­ப­வம் தஞ்சை மாவட்­டத்­தில் நிகழ்ந்­துள்­ளது.

திரு­வி­டை­ம­ரு­தூர் அருகே ஆடு­துறை கஞ்­சான் மேட்­டுத் தெருவை சேர்ந்­த­வர் பழ­னி­வேல், 70, ஆசி­ரி­யர் பணி­யி­லி­ருந்து ஓய்­வு­பெற்­ற­வர். இவ­ரது மனைவி பர­மேஸ்­வரி, 65.

இவர்­க­ளது மகன்­கள் ராஜா (எ) ராஜ­வே­லன், பாலா, மகள் கனி­மொழி. மூவ­ருக்­கும் திரு­ம­ண­மாகி தனித்­த­னியே வசிக்­கின்­ற­னர்.

மூத்த மகன் ராஜ­வே­லன், கோவை அருகே பொங்­க­லூ­ரில் ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­று­கி­றார். இவ­ரது வீட்­டில் பழ­னி­வே­லு­வும் பர­மேஸ்­வ­ரி­யும் வசித்து வந்­த­னர்.

கடந்த சில மாதங்­க­ளாக உடல்­நிலை பாதிக்­கப்­பட்ட பழ­னி­வேல் வெள்­ளிக்­கி­ழமை காலை இறந்­தார்.

சொந்த ஊரான ஆடு­து­றைக்­குக் கொண்­டு­செல்ல பழ­னி­வே­லின் உடலை வேனில் ஏற்­றிக் கொண்­டி­ருந்­த­னர். அப்­போது, கண­வர் இறந்த துக்­கம் தாளா­மல் அவ­ரது உட­லைப் பார்த்து கத­றித் துடித்த பர­மேஸ்­வரி, சிறிது நேரத்­தில் மார­டைப்பு ஏற்­பட்டு அங்­கேயே இறந்­தார்.

பின்­னர் இரு­வ­ரது உடல்­களும் ஆடு­து­றை­யில் உள்ள வீட்­டுக்­குக் கொண்டு செல்­லப்­பட்டு இறு­திச்­

ச­டங்­கு­கள் செய்­யப்­பட்­டன.

கண­வ­ரும் மனை­வி­யும் அடுத்­

த­டுத்து இறந்த சம்­ப­வம் அப்­ப­கு­தி ­யில் பெரும் சோகத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!