கருணாநிதி திறந்த நுழைவுவாயிலை ஸ்டாலினும் திறந்தார்

திரு­வண்­ணா­மலை: கடந்த 1973ஆம் ஆண்டு திமுக ஆட்­சி­யின்­போது திரு­வண்­ணா­மலை நக­ராட்சி பொன்­வி­ழாவை முன்­னிட்டு திரு­வண்­ணா­மலை - வேலுார் சாலை­யில் 'அண்­ணா­துரை நுழைவு வாயில்' கட்­டப்­பட்­டது. இதை அப்­போ­தைய முதல்­வர் கரு­ணா­நிதி திறந்து வைத்­தார்.

இந்த நுழைவு வாயிலை 48 ஆண்­டு­க­ளாக வர­லாற்று சின்­னம்­போல் திமு­க­வி­னர் கொண்­டாடி வந்­த­னர். இந்­நி­லை­யில் சாலை விரி­ வாக்­கத்­திற்­காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடிக்­கப்­பட்ட இந்த நுழைவுவாயில், விரி­வாக்­கம் செய்­யப்­பட்டு தற்­போது 42 அடி உய­ரம், 60 அடி அக­லத்­தில் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

'அறி­ஞர் அண்ணா நுழைவு வாயில்' என மாற்றி பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. அதன் அரு­கில் 13 அடி உயர பீடத்­தில் எட்டு அடி உய­ரத்­தில் கரு­ணா­நி­தி­யின் வெண்­கலச் சிலை அமைக்­கப்­பட்டுள்­ளது.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருவண்ணாமலை சென்ற முதல்­வர் மு.க. ஸ்டா­லின், நேற்று முன்­தி­னம் அண்ணா நுழைவுவாயிலை யும் கருணாநிதி சிலையையும் திறந்து வைத்­தார். அரு­கில் 66 அடி உய­ரத்­தில் அமைக்­கப்­பட்­டுள்ள கொடிக்­கம்­பத்­தில் திமுக கொடியை அவர் ஏற்­றி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!