ஜெயலலிதா சொத்தில் பாதி வேண்டும்: முதியவர் வழக்கு

சென்னை: மறைந்த தமி­ழக முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் சகோ­த­ரர் எனக் கூறி, 83 வயது முதி­ய­வர் ஒரு­வர் (படம்) சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் மனு ஒன்றைத் தாக்­கல் செய்­துள்­ளார்.

கர்­நா­டகா மாநி­லம் மைசூ­ரு­வில் உள்ள வியா­ச­ரா­பு­ரத்­தைச் சேர்ந்த தமது பெயர் வாசு­தே­வன் என்­றும் ஜெய­ல­லி­தா­வின் தந்­தை­யான ஆர்.ஜெய­ராம் தனக்­கும் தந்தை என்­றும் அவர் அந்த மனு­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

தமது தந்தை ஜெய­ரா­மின் முதல் மனைவி ஜெ.ஜெயம்மா என்­றும் அவர்­க­ளின் ஒரே வாரிசு தான் மட்­டுமே என்­றும் அவர் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

"வேத­வல்லி என்­கிற வேதம்­மாவை தந்தை ஜெய­ராம் இரண்­டா­வ­தா­கத் திரு­ம­ணம் செய்­து­கொண்­ட­தன் மூலம்­தான், ஜெயக்­கு­மா­ரும் ஜெய­ல­லி­தா­வும் பிறந்­த­னர்.

"அந்த வகை­யில் ஜெய­ல­லிதா, ஜெயக்­கு­மார் ஆகி­யோர் எனது சகோ­தர, சகோ­தரி.

"1950ஆம் ஆண்டு ஜீவ­னாம்­சம் கேட்டு மைசூரு நீதி­மன்­றத்­தில் எனது தாய் ஜெயம்மா வழக்­குத் தொடர்ந்­த­போது, அந்த வழக்­கில் தந்­தை­யின் இரண்­டா­வது மனைவி வேத­வல்லி, ஜெயக்­கு­மார், ஜெய­ல­லிதா ஆகி­யோர் எதிர்­ம­னு­தா­ரர்­க­ளா­கச் சேர்க்­கப்­பட்டு இருந்­த­னர்.

"பின்­னர் இந்த வழக்கு சம­ர­சத்­தில் முடிந்­து­விட்­டது. ஜெய­ல­லிதா இறப்­ப­தற்கு முன்பே ஜெயக்­கு­மார் இறந்­து­விட்­டார்.

"அத­னால் இன்­றைய தினத்­தில் சகோ­த­ரன் என்ற முறை­யில் ஜெய­ல­லி­தா­வின் நேரடி வாரிசு நான்­தான். எனவே ஜெய­ல­லி­தா­வின் சொத்­து­களில் 50 விழுக்­காட்­டைத் தர­வேண்­டும்.

"ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகி­யோர் மட்­டுமே ஜெய­ல­லி­தா­வின் வாரி­சுகள் என்று 2020ஆம் ஆண்டு சென்னை உயர் நீதி­மன்­றம் பிறப்­பித்த தீர்ப்­பில் திருத்­தம் செய்­ய­வேண்­டும்," என்­றும் முதி­ய­வர் வாசு­தே­வன் தமது மனு­வில் கோரிக்கை வைத்­துள்­ளார்.

நான்­காண்­டு­க­ளுக்கு முன்பு கர்­நா­ட­கா­வைச் சேர்ந்த அம்­ருதா என்­ப­வர் தாம் சோபன்பாபு-ஜெய ­ல­லி­தா­வின் மகள் என்று வழக்­குத் தொடுத்­தார்.

விசாரணைக்குப் பின்னர், அது பொய்யாகத் தொடுக்கப்பட்ட வழக்கு என்று தெரியவந்ததால் அதனை உயர் நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!