ரூ.5 லட்சத்தில் மண் சாலை அமைத்த விவசாயிகள்

குட­வா­சல்: திரு­வா­ரூர் மாவட்­டம், குட­வா­சல் அருகே 11 விவ­சா­யி­கள் ஒன்றுசேர்ந்து, தங்­க­ளது விளைநிலங்­கள் வழி­யாக சாலை அமைப்­ப­தற்­குத் தேவை­யான நிலத்தை ஒதுக்கி, அதில் மண் சாலையை அமைத்துள்ளனர்.

இதற்குத் தேவையான ரூ.5 லட்சம் நிதியை அங்குள்ள விவ சாயிகள் அனைவரும் திரட்டி, சீதக்­க­மங்­க­ளம் முதல் பனைக்­கரை வரை 3 கி.மீ. தொலை­வுக்கு சாலை போட்டுள்ளனர்.

சீதக்­க­மங்­க­ளம் கிரா­மத்­தில் 700 ஏக்­கர் பரப்­ப­ள­வில் விவ­சாய நிலங்­கள் உள்­ளன. இந்த வயல்­களுக்­குச் சென்றுவர சரியான பாதை வசதி இல்லாமல், உரங்கள், நெல்மூட்­டை­களை விவ­சா­யி­கள் வயல் வரப்புகள் மூல­மா­கவே கொண்டுசென்று வந்­த­னர்.

இந்நிலையில், அர­சின் உத­வியை எதிர்பார்க்காமல், ரூ.5 லட்­சம் செலவில் மண் சாலை அமைத்­துள்ள விவசாயிகளை மக்­களும் சமூக ஆர்­வ­லர்­களும் பாராட்டி வரு­கின்­ற­னர். எனினும், தமிழக அரசு விரைவில் தார் சாலை அமைத்­துத் தரவேண்­டும் என்று விவ­சா­யி­கள் கோரியுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!