நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்கு; உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: நீர்­நிலை ஆக்­கி­ர­மிப்பு விவ­கா­ரத்­தில் உயர் நீதி­மன்­றம் கடு­மை­யான எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

ஆக்­கி­ர­மிப்­பு­களை அகற்­ற­வில்­லை­யென்­றால் பத்து நாட்­களில் தலை­மைச் செய­லா­ளர் முன்­னி­லை­யாக உத்­த­ர­விட நேரி­டும் என்று அது கூறி­யுள்­ளது.

சென்னை வேளச்­சேரி, தர­மணி, உள்­ளிட்ட இடங்­களில் உள்ள மழை­நீர் வடி­கால்­களை ஆக்­கி­ர­மித்து கட்­ட­டங்­கள் கட்­டப்­பட்­டுள்­ள­தாக செய்தி வெளி­யா­னது. இந்த செய்­தி­யின் அடிப்­ப­டை­யில் தாமாக முன் வந்து வழக்கை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்ட சென்னை உயர் நீதி­மன்ற தலைமை நீதி­பதி முனீஸ்­வர்­நாத் பண்­டாரி தலை­மை­யி­லான அமர்வு, சம்­பந்­தப்­பட்ட பகு­தி­களை நேரில் ஆய்வு செய்து ஆக்­கி­ர­மிப்­பு­கள் இருந்­தால், அவற்றை சட்­டப்­படி அகற்ற வேண்­டும். இது குறித்து கடந்த மார்ச் 31ஆம் தேதிக்­குள் அறிக்கை தாக்­கல் செய்ய வேண்­டும் என உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

இந்த நிலை­யில் இந்த வழக்கு, தலைமை நீதி­பதி முனீஸ்­வர்­நாத் பண்­டாரி, நீதி­பதி மாலா அமர்­வு முன்பு நேற்று மீண்­டும் விசா­ர­ணைக்கு வந்­தது.

அப்­போது அறிக்கை தாக்­கல் செய்ய அவ­கா­சம் வேண்­டும் என அர­சுத் தரப்­பில் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து வழக்கு விசா­ர­ணையை இரு வாரங்­க­ளுக்கு நீதி­ ப­தி­கள் ஒத்தி வைத்­த­னர்.

"ஆக்­கி­ர­மிப்­பு­களை அகற்ற பிறப்­பித்த உயர் நீதி­மன்ற உத்­த­ரவை அமல்­ப­டுத்­தி­யது குறித்து அறிக்கை தாக்­கல் செய்­யாத அதி­கா­ரி­க­ளுக்கு 25,000 ரூபாய் அப­ரா­தம் விதிக்­கி­றோம். நீர்­நிலை ஆக்­கி­ர­மிப்­பு­களை அகற்­றக் கோரிய வழக்­கு­களில் உயர் நீதி­மன்ற உத்­த­ரவை அதி­கா­ரி­கள் அமல்­ப­டுத்­து­வது இல்லை.

"இது­போன்ற உத்­த­ர­வு­களை அமல்­ப­டுத்த வேண்­டும் என தலை­மைச் செய­லா­ளர் சுற்­ற­றிக்கை வெளி­யிட்டும் உத்­த­ரவை அதி ­கா­ரி­கள் அமல்­ப­டுத்­து­வ­தில்லை.

"எனவே உயர் நீதி­மன்ற உத்­த­ரவை 10 நாட்­களில் அமல்­ப­டுத்­தா­விட்­டால் தலை­மைச் செய­லா­ளர் நேரில் முன்­னி­லை­யாக நேரி­டும் சம்­பந்­தப்­பட்ட மாவட்ட ஆட்­சி­யர்­கள் உள்­ளிட்ட அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்ற அவ­ம­திப்பு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என்று நீதி ­ப­தி­கள் எச்­ச­ரித்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!