கச்சநத்தம் வன்கொடுமை வழக்கு: 27 பேர் குற்றவாளிகள்

சிவ­கங்கை: கச்­ச­நத்­தம் பகு­தி­யில் வன்­கொ­டு­மைக்கு மூன்று பேர் பலி­யான வழக்­கில் குற்­றம்­சாட்­டப்­பட்ட 27 பேரும் குற்­ற­வா­ளி­கள் என சிவ­கங்கை மாவட்ட வன்­கொ­டுமை தடுப்பு நீதி­மன்­றம் அதி­ர­டி­யா­கத் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

கடந்த 2018 மே மாதம் அந்­தப் படு­கொ­லைச் சம்­ப­வம் நிகழ்ந்­தது. சம்­ப­வத்­தன்று நள்­ளி­ரவு வேளை­யில் திருப்­பாச்­சேத்தி அருகே கச்­ச­நத்­தம் கிரா­மத்தைச் சேர்ந்த ஆறு­மு­கம் (65 வயது), சண்­மு­க­நா­தன் (31 வயது), சந்­தி­ர­சே­கர் (34 வயது) ஆகிய 3 பேரும் கொடூ­ர­மான முறை­யில் வெட்­டிக் கொல்­லப்­பட்­ட­னர்.

உள்­ளூர் கோவில் திரு­வி­ழா­வில் யாருக்கு முதல் மரி­யாதை அளிக்­கப்­பட வேண்டும் என்பது தொடர்­பாக இருதரப்­பி­னர் இடையே நீண்­ட­கா­ல­மாக மோதல் நிலவி வந்­தது. இந்த முன்­வி­ரோ­தம் கார­ண­மாக மூன்று பேர் திட்­ட­மிட்­டுக் கொல்­லப்­பட்­ட­னர். மேலும் ஐந்து பேர் படு­கா­ய­ம­டைந்­த­னர். இது தொடர்­பாக 32 பேர் கைதா­கி­னர்.

இத­னால் திருப்­பாச்­சேத்தி, கச்­ச­நத்­தம் உட்­பட சிவ­கங்கை மாவட்­டத்­தின் பல்­வேறு பகு­தி­களில் பெரும் பதற்­றம் நில­வி­யது. காவல்­து­றை­யி­னர் தீவிர சுற்­றுக்­கா­வல், கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டதை அடுத்து சில வாரங்­க­ளுக்­குப் பிறகே இயல்பு நிலை திரும்­பி­யது.

கைதான 32 பேரில் ஒரு­வர் மற்­றொரு சம்­ப­வத்­தில் கொலை செய்­யப்­பட்ட நிலை­யில், இன்னொருவர் உயிரை மாய்த்­துக்கொண்­டார்.

மூன்று பேர் சிறார்­கள் என்­ப­தால் அவர்­கள் மீது சிறார் நீதி­மன்­றத்­தில் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது. எனவே மீத­முள்ள 27 பேர் மீது வழக்கு நடை­பெற்று வந்­தது. இந்­நி­லை­யில், அவர்­கள் அனை­வ­ருமே குற்­ற­வா­ளி­கள் என­ சிவ­கங்கை மாவட்ட வன்­கொ­டுமை தடுப்பு நீதி­மன்ற நீதி­பதி முத்­துக்­கு­ம­ரன் அறி­வித்­தார்.

அவர்­க­ளுக்­கான தண்­டனை இன்று அறி­விக்­கப்­படும் என்­றும் நீதி­பதி தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!