சென்னையில் 300 ஆண்டு பழமையான கற்சிலைகள் மீட்பு

சென்னை: சென்னை பாரி­மு­னை­யில் பதுக்கி வைக்­கப்­பட்டு இருந்த 300 ஆண்­டு­கள் பழ­மை­யான கற்­சிலைகளை காவல்­துறை மீட்­டுள்­ளது.

சென்னை பாரி­மு­னை­யில் உள்ள பிடா­ரி­யார் கோவில் தெரு­வைச் சேர்ந்த இமா­னு­வேல் பினிரோ சில ஆண்­டு­க­ளுக்கு முன் இறந்­து­விட்­டார். இவ­ரது வீட்­டில், பழ­மை­யான கோவில் சிலை­கள் பதுக்கி வைக்­கப்­பட்டு இருப்­ப­தாக சிலை கடத்­தல் தடுப்­புப் பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முர­ளிக்கு தக­வல் கிடைத்­தது.

அந்த வீட்­டில் இமா­னு­வேல் பினி­ரோ­வின் மனைவி பமீலா, 65, என்­ப­வர் வசித்து வரு­கி­றார்.

ஐஜி தின­க­ரன் தலை­மை­யில் அந்த வீட்டை நேற்று முன்­தி­னம் காவல்­து­றை­யி­னர் சோத­னை­யிட்­ட­தில் அங்கு பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த தட்­சி­ணா­மூர்த்தி, முரு­கன், வள்ளி, தெய்­வானை, அம்­மன், சனீஸ்­வ­ரர் உட்­பட ஒன்­பது கற்­சி­லை­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன,

இது குறித்து பேசிய காவல்­துறை அதி­கா­ரி­கள், "இந்­தச் சிலை­கள், 300 ஆண்­டு­கள் பழ­மை­யா­னவை. சிலை­க­ளின் அடிப்­ப­கு­தி­யில் கோவி­லில் நிறு­வப்­பட்டு இருந்­த­தற்­கான தட­யங்­கள் உள்­ளன.

இத­னால் இவை திரு­டப்­பட்ட சிலை­க­ளாக இருக்­கும். எந்த கோவில்­களில் இருந்து இந்த சிலை­கள் திரு­டப்­பட்­டன என்­பதை விசா­ரித்து வரு­கி­றோம் என்று கூறி­னர்.

இந்த சிலை­களை வெளி­நாடு களுக்கு கடத்த திட்­ட­மி­டப்­பட்டு இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இதன் பின்­ன­ணி­யில் உள்ள நபர்­கள் குறித்­தும் விசாரிக்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!