12 ஆண்டுகள் மாதின் வயிற்றில் கத்தரிக்கோல்: ஒரு மாதத்திற்குள் ரூ.10 லட்சம் கொடுக்கும்படி அரசுக்கு ஆணையம் உத்தரவு

சென்னை: அரசு மருத்­து­வர்­க­ளின் அலட்­சி­யத்­தால் பல ஆண்­டு­க­ளாக வயிற்­றில் கத்­த­ரிக்­கோ­லு­டன் அவதிப்பட்ட பெண்­ணுக்கு, ரூ.10 லட்­சம் இழப்­பீடு வழங்க வேண்­டும் என தமிழ்­நாடு மாநில மனித உரிமை­கள் ஆணை­யம் தமி­ழக அர­சுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.

திரு­வள்­ளூர் மாவட்­டம் திருத்­தணி பகு­தி­யைச் சேர்ந்த பாலாஜி என்­ப­வ­ரின் மனை­வி­யான குபேந்திரி என்­ப­வர், கடந்த 2008ஆம் ஆண்டு, பிர­ச­வத்­துக்­காக திருத்­தணி அரசு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு குழந்தை பிறந்தது. பிறகு அடிக்­கடி வயிற்று வலி ஏற்­பட்­டது.

கடு­மை­யாக வயிற்று வலி ஏற்­பட்­ட­தை­ய­டுத்து, கடந்த ஆண்டு மே மாதம் அவர் திரு­வள்­ளூர் அரசு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார். மாதின் வயிற்­றுக்­குள் கத்­தரிக்­கோல் இருப்­பது தெரி­ந்­தும் மருத்­து­வர்­கள் கத்­த­ரிக்­கோல் இருப்­ப­தைக் காட்­டும் படத்­தை­யும் அறிக்­கையையும்­ மாதி­டம் கொடுக்க மறுத்­த­தாகக் கூறப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து, பாலாஜி அவ­ரது மனை­வியை சென்னை, ராஜீவ்­காந்தி அரசு மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­தார். அங்கு அவ­ருக்கு செய்­யப்­பட்ட அறுவை சிகிச்சை மூலம் சுமார் 12 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு கத்­த­ரிக்­கோல் அகற்­றப்­பட்­டது.

அங்­கே­யும் கத்­த­ரிக்­கோல் வயிற்­றுக்­குள் இருக்­கிறது எனச் சொல்­லா­மல், உட­ன­டி­யாக அறுவை சிகிச்சை செய்ய வேண்­டும் என மட்­டுமே அந்த மாதி­டம் மருத்­துவர்­கள் கூறி­ய­தாகக் கூறப்­ப­டு­கிறது.

பின்­னர் இது பற்றி அந்த மாதும் அவ­ரின் கண­வ­ரும் மருத்­து­வர்­கள் மீது தக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் எனக் கோரி முதல்­வரின் தனிப்­பி­ரி­வுக்கு அவசர புகார் அனுப்பினர்.

அதன் அடிப்­ப­டை­யில் இந்த விவகாரத்தை மாநில மனித உரிமை­கள் ஆணை­யம் விசா­ர­ணைக்கு எடுத்­தது. வழக்கை விசா­ரித்த ஆணை­யம், திரு­மதி குபேந்­தி­ரிக்கு ஒரு மாத காலத்­துக்­குள் ரூ.10 லட்­சத்தை இழப்­பீ­டாக தமி­ழக அரசு வழங்க வேண்­டும் என்று உத்­த­ர­விட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!