போதைப்பொருள்களை ஒழிக்க எம்எல்ஏக்கள் கைகோக்க முதல்வர் வேண்டுகோள்

சென்னை: போதைப்பொருள்­களின் பயன்­பாட்டை முற்­றி­லும் இல்லாத வாறு துடைத்தொழிக்கத் தமி­ழக அரசு உறுதியேற்றுள்ளது. இதற்கு முழு ஒத்­து­ழைப்பு அளிக்­கும்­படி அனைத்து எம்­எல்­ஏக்­க­ளுக்­கும் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

போதைக் கலா­சா­ரம் நாட்­டின் எதிர்­கா­லத்தைக் கடு­மை­யா­கப் பாழ்படுத்தி வருகிறது. இதனை யாரும் துளியளவும் பயன்­ப­டுத்­தா­மல் தடுக்­க­வேண்­டி­யது அவ­சி­யம் என கடி­தத்­தில் கூறி­யுள்­ளார்.

ஆகஸ்ட் 11ஆம் தேதி, போதைப்­பொ­ரு­ளுக்கு எதி­ரான விழிப்­புணர்வு நாளாக அனு­ச­ரிக்­கப்­பட உள்­ளது. அன்­றைய தினம் பள்ளி, கல்­லூ­ரி­களில் விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சி­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. அவ­ர­வர் தொகு­தி­களில் நடத்­தப்­படும் நிகழ்ச்­சி­களில் எம்­எல்­ஏக்­கள் தவ­றா­மல் கலந்­து­கொள்ளவேண்­டும் என முதல்­வர் வலி­யு­றுத்தியுள்ளார்.

"இது அர­சி­யல் பிரச்­சினை அல்ல, நாட்­டின் எதிர்­கா­லம் குறித்த பிரச்­சினை. தொடர்ச்­சி­யான பிர­சா­ரம் மூல­மா­கத்­தான் போதைப் பொருள்­க­ளின் தீமையைச் சமூகத் தினரிடம் உணர்த்­த­மு­டி­யும். இதற்கு எம்­எல்­ஏக்­க­ளின் முழு ஒத்­து­ழைப்பும் அவ­சி­யம்," என கடி­தத்­தில் ஸ்டா­லின் கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!