உயர் பதவியில் தமிழக விஞ்ஞானி

புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ந.கலைச்செல்வி (படம்) அறிவியல், தொழில் ஆராய்ச்சி மன்றத்தின் தலைமை இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார்.

இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 4,500 விஞ்ஞானிகள் பணி யாற்றும் 38 ஆராய்ச்சி மையங்களுக்கு இவர் தலைமை ஏற்பார். இப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையும் கலைச் செல்விக்குக் கிடைத்துள்ளது.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரம சிங்கபுரத்தைச் சேர்ந்த கலைச்செல்வி, விஞ்ஞானியாக 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வுப் பணியில் ஈடுபட்ட அனுபவம் உள்ள அவர், 125க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.

மேலும், ஆறு காப்புரிமைகளும் பெற்றுள்ளார்.

கலைச்செல்விக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!