டெல்டா மாவட்ட ஏரி, குளங்கள் நிரம்புகின்றன

புதுடெல்லி: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன.

இதனால் அம்மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமாக கல்லணை கால்வாய்ப் பகுதியில் மட்டும் 694 ஏரி, குளங்கள் உள்ளன.

நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை நன்றாகப் பெய்ததால் கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. அவற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து, முன்கூட்டியே அணை திறந்துவிடப்பட்டது.

இதனால் ஏரிகள் நிரம்பி உள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் சில மாதங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதால் இந்த ஆண்டு விவசாயிகள் தண்ணீருக்கு காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!