செய்திக்கொத்து

அரசியலில் ஆர்வம் காட்டும் ஆசிரியர்களுக்கு விருதில்லை

சென்னை: சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதற்கான நிபந்தனைகளைத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்கள் விருதுப் பட்டியலில் இடம்பெறாது. அதேபோல், வணிக ரீதியாக கற்பித்தல் பணிகளில் ஈடுபடுவோரும் விருதுபெறத் தகுதி அற்றவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

பள்ளி முதல்வர், ஆசிரியர்களுக்கு 22ஆம் தேதிவரை காவல் நீட்டிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி தனி­யார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற 12ஆம் வகுப்பு மாணவி உயி­ரி­ழந்த விவ­காரம் தொடர்­பில், பள்­ளி முதல்­வர் சிவ­சங்­க­ரன், 57, தாளா­ளர் ரவிக்­கு­மார், 48, செய­லா­ள­ர் சாந்தி ரவிக்­கு­மார், 44, ஆசி­ரி­யை­கள் ஹரிப்­பி­ரியா, 40, கிருத்­திகா, 28, ஆகி­ய ஐவர் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததை அடுத்து, ஐவரும் காணொளிக் காட்சி மூலம் கள்­ளக்­கு­றிச்சி குற்­ற­வி­யல் நடு­வர் நீதி­மன்ற நீதி­பதி முகம்­மது அலி முன்பு முன்­னி­லையாகினர். அவர்களது சிறைக் காவலை ஆகஸ்ட் 22ஆம் தேதி­வரை நீட்டித்து நீதி­பதி உத்­த­ர­விட்­டார்.

புதையலாகக் கிடைத்த

கிருஷ்ணர், புத்தர் சிலைகள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே உள்ள செங்குன்றம் அய்யாகுளத்தைத் தூர்வாரும் பணி நடைபெற்றபோது இரண்டு அடி உயரமுள்ள கிருஷ்ணர் கற்சிலை கிடைத்தது. அதனை அங்குள்ள கோயிலுக்கு வழங்குமாறு மக்கள் கோரிய நிலையில், வருவாய்த்துறையினரிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. இதேபோல், திருவள்ளூர், பொன்னேரி அருகே அரசு தொடக்கப்பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டுவதற்காக குழி ேதாண்டும் பணி நடைபெற்றது. அப்போது புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது. வருவாய்த்துறையினர் அதையும் எடுத்துச் சென்றனர்.

விமான நிலையத்துக்கு முன்கூட்டியே வர அறிவுறுத்து

சென்னை: இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் ேசாதனைகளுக்கு அதிக நேரமாகும் என்பதால், விமானத்தைத் தவறவிடுவதைத் தவிர்க்க முன்கூட்டியே வரும்படி பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வரும் 20ஆம் தேதி வரை இந்தச் சோதனைகள் தொடரும் எனவும் விமானநிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சூதாட்டத்தை தடை செய்ய கருத்து கேட்பதா? என சாடிய பழனிசாமி

ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி சூதாட்டத்தைத் தடை செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் கூறுகிறார். "சூதாட்டத்தைத் தடை செய்ய யாராவது கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவார்களா? இணைய ரம்மி நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி வருமானம் ஈட்டுகின்றன. திமுக அரசுடன் ரம்மி விளையாட்டை நடத்துவோர் கைகோத்துள்ளனர். அதனால்தான், இதுவரை தடைச் சட்டம் கொண்டு வரப்படவில்லை," என அதிமுக இடைக் காலப் பொதுச்செயலாளருமான பழனிசாமி சாடியுள்ளார்.

29 பேரின் சொத்துகள் முடக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டதாக 29 பேரின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. 29 பேரின் ரூ.2.43 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி இம்மாவட்ட காவல் ஆய்வாளர் சாய்சரண் தேஜஸ்வி நடவடிக்கை எடுத்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!