சிறுவன் உயிரிழப்பு: பெற்றோருக்கு ரூ.1 கோடி இழப்பீடு

சென்னை: மருத்­து­வர்­க­ளின் அலட்­சி­யத்­தால் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ.1 கோடியை இழப்பீடாக வழங்கும்படி சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு தேசிய நுகர்­வோர் குறை­தீர்ப்பு ஆணை­யம் உத்­தரவிட்­டுள்­ளது.

சென்­னை­யில் வசிக்­கும் ஒரு தம்­ப­தி­யர், கடந்த 2000ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தங்­களது ஆறு வயது மக­னின் மாறு கண் பிரச்­சினைக்­குத் தீர்வு காண அங்­குள்ள கண் மருத்­து­வ­மனைக்கு அழைத்துவந்துள்ளனர்.

அச்­சி­று­வனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதற்கு பரிந்­துரைத்துள்ள னர். இதை­ய­டுத்து, ஜூன் 14ஆம் தேதியன்று அறுவை சிகிச்­சைக்­காக சிறுவனை மருத்­து­வ­மனைக்கு பெற்றோர் அழைத்து வந்துள்ளனர்.

அறுவை சிகிச்­சைக்கு முன்பு சிறு­வ­னின் இத­யத் துடிப்பு சீரற்று இருந்துள்ளது. உடல்­களில் சில மாற்றங்களும் அதிர்­வு­களும் தென்­பட்­டுள்­ளன.

இதையடுத்து, உட­ன­டி­யாக அங்­குள்ள இதய சிகிச்சை நிபு­ண­ரி­டம் சிறுவனைப் பரி­சோதித்த போது, "சிறு­வ­னுக்கு சிகிச்சை ஒன்­றும் செய்யத் தேவை­யில்லை, மயக்க மருந்து வழங்கி அறுவை சிகிச்­சை­யைத் தொட­ர­லாம்," என அவர் தெரி­வித்­துள்­ளார்.

அறுவை சிகிச்­சைக்கு முன்­ன­தாக வெறும் வயிற்­று­டன் காலை 9 மணிக்­கெல்­லாம் மருத்­து­வ ­ம­னைக்கு வந்­திருந்த சிறுவனுக்கு மதி­யம் 2 மணி அள­வில்­தான் அறுவை சிகிச்சை நடை­பெற்­றது.

நீண்ட நேரம் உணவு உண்­ணா ததால் உட­லில் சர்க்­கரை அளவு குறைந்து, அறுவை சிகிச்­சைக்­குப் பின்­னர் சிறு­வ­னுக்கு மார­டைப்பு ஏற்­பட்டு உயி­ரி­ழந்­துள்­ளான்.

மருத்­து­வர்­க­ளின் அலட்­சியப் போக்கே இதற்குக் கார­ணம் என பெற்­றோர் குற்­றஞ்­சாட்டி தேசிய நுகர்­வோர் ஆணை­யத்­தில் வழக்­குத் தொடுத்­துள்­ள­னர்.

இவ்வழக்கை விசா­ரித்த ஆர் கே அகர்­வால் தலை­மை­யி­லான அமர்வு, மருத்­து­வர்­க­ளின் அலட்­சி­யமான செயல்பாடுகளே சிறு­வ­னின் உயி­ரி­ழப்­புக்­குக் கார­ணம் என உத்­த­ர­வில் தெரி­வித்­து, பாதிக்­கப்­பட்ட பெற்­றோ­ருக்கு ரூ.1 கோடி இழப்­பீடு வழங்க உத்­த­ர­விட்­டு உள்­ளது.

பெற்றோரின் புகார்கள் சரியே, மருத்துவர்களின் அலட்சியமே சிறுவனின் உயிரிழப்புக்குக் காரணம். பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு ரூ.1 கோடி

இழப்பீடு வழங்க வேண்டும்.

வழக்கை விசா­ரித்த ஆர்.கே. அகர்­வால் தலை­மை­யி­லான அமர்வு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!