30வது தென்மண்டலக் கழகக் கூட்டத்தில் முதல்வர்கள் சந்திப்பு ‘பொருள் சேவை வரியால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை’

திரு­வ­னந்­த­பு­ரம்: கேரள மாநி­லம், கோவ­ளத்­தில் நேற்று நடை­பெற்ற தென்­மண்­ட­லக் கழ­கக் கூட்­டத்தில் பேசிய முதல்­வர் மு.க.ஸ்டா­லின், பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) அம­லா­ன­தால் மாநி­லங்­க­ளுக்கு பெரும் நிதிச்­சுமை ஏற்­பட்­டுள்ள தாகத் தெரிவித்தார்.

"இந்திய மாணவர்கள் மருத்துவம் பயில்வதற்கு அவசியமான நீட் தேர்வில் இருந்து தமி­ழ­கத்­திற்கு விலக்கு அளிக்கவேண்­டும்," என்றும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.

அத்துடன், தமி­ழ­கத்­திற்­கான வெள்­ளப் பாதிப்பு உள்­ளிட்­ட­வற்­றுக்­கான நிதியை மத்­திய அரசு உட­­னடி­யாக வழங்­க­வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்­திப் பேசினார்.

தென்­னிந்­திய மாநி­லங்­கள், யூனி­யன் பிர­தே­சங்­க­ளின் 30வது தென் மண்­ட­லக் கழ­கக் கூட்­டத்தை மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா நேற்று கோவளத்தில் தொடங்கி வைத்­தார்.

இக்கூட்­டத்­தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டா­லின், கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன், கர்­நா­டகா, ஆந்­திரா, தெலுங்­கானா ஆகிய தென் மாநில முதல்­வர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

கழகக் கூட்­டத்­தில் முதல்வர் ஸ்டா­லின் பேசி­ய­போது, "பொருள் சேவை வரி அம­லா­க்கத்தால் மாநி­லங்­களுக்கு நிதிச்­சுமை ஏற்­பட்­டுள்­ளது. அத­னால், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்­பீட்­டுத் தொகை வழங்­கும் காலத்தை மேலும் நீட்­டிக்­க­வேண்­டும்," என்றார்.

மக்­க­ளுக்கு குறைந்த விலை­யில் மின்­சா­ரம் கிடைக்க வழி­வகை செய்­ய­வேண்­டும் எனக் கோரியவர், அண்டை மாநி­லங்­களை இணைக்­கும் வகை­யிலான அதி­வேக ரயில் வழித்­த­டத்தை உரு­வாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கவேண்­டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்­தி­யில் கூட்­டாட்சி, மாநி­லத்­தில் சுயாட்சி என்­ப­தில் தமிழ்­நாடு உறு­தி­யாக உள்­ளதாகக் கூறினார்.

தென்­னிந்­திய முதல்வர்கள் "யாதும் ஊரே யாவ­ரும் கேளிர்" என்ற உணர்­வோடு ஒருங்­கிணைந்து செயல்­பட்டு, அனைத்து பிரச்­சினை­ க­ளுக்கும் தீர்வு காணவேண்­டும்.

அடுத்த தென்­மண்­டலக் கூட்­டத்தை தமிழ்­நாட்­டில் நடத்தவேண்­டும் எனவும் முதல்­வர் ஸ்டா­லின் கோரிக்கை வைத்­தார்.

முன்ன­தாக, கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யனிடம் 'திரா­விட மாடல்' என்ற புத்­த­கத்­தை முதல்வர் ஸ்டாலின் பரி­சாக வழங்­கி­னார்.

அத்­து­டன், இரண்டு மாநி­லங்­க­ளுக்­கும் நன்மை பயக்­கும் திட்­டங்­கள் குறித்த அறிக்கையையும் கேரள முதல்வரிடம் வழங்­கி­னார்.

மாநி­லங்­க­ளுக்கு இடை­யே­யான நதி­நீர் பகிர்வு, எல்லைப் பாது­காப்பு குறித்­தும் இரு­ மாநில முதல்வர்களும் ஆலோ­சித்ததாகவும் தக­வல்­கள் வெளி­யாகி உள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!