சென்னைக்கு வருகிறது ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல்

சென்னை: ஐ.என்.எஸ். விக்­ராந்த் என்ற விமா­னம்தாங்கி போர்க்­கப்­பலை விசா­கப்­பட்­டி­னம் துறை­மு­கத்­தில் நிறுத்­து­வ­தற்குப் போது­மான வச­தி­கள் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால், சென்னையை அடுத்த காட்­டுப்­பள்­ளி­யில் உள்ள 'எல் அண்ட் டி' கப்­பல் கட்­டும் தளத்­தில் நிறுத்த திட்­ட­மிட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­தக் காட்­டுப்­பள்ளி கடற்கரை துறைமுகம் எந்தவொரு பிரம்­மாண்­ட­மான கப்­பலையும் நிறுத்­து­வ­தற்குத் தோதாக ஆழம், பரப்­பளவு உள்­ளிட்ட அனைத்து வசதி­ க­ளை­யும் கொண்டுள்ளது.

இது­கு­றித்து அதி­கா­ரி­கள் தரப்­பில் கூறும்­போது, "காட்­டுப்­பள்ளி துறை­மு­கத்­தில் விக்­ராந்த் போர்க்­கப்­பலை நிறுத்­து­வது தொடர்­பான பேச்­சு­வார்த்தை முடிந்­து­விட்­டது. விரை­வில், அடுத்தகட்ட பணி­கள் தொடங்­கப்­பட உள்­ளன.

"அந்­தப் பணி­கள் முடிந்­த­வு­டன் கொச்­சி­யில் இருந்து விக்­ராந்த் கப்­பல் காட்டுப்பள்ளிக்கு கொண்டு ­வ­ரப்­பட உள்­ளது.

"இந்தக் கப்­பல் கட்­டும் தளத்­தில் ஏறத்தாழ எட்டு ஆண்­டு­கள் வரை­ விக்ராந்த் கப்பலை நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளது," என்­ற­னர்.

இந்­தி­யக் கடற்­ப­டைக்­காக முற்­றி­லும் உள்­நாட்­டி­லேயே தயாரிக்­கப்­பட்ட ஐ.என்.எஸ். விக்­ராந்த் போர்க்­கப்­பலை பிர­த­மர் மோடி இரு தினங்­க­ளுக்கு முன் நாட்­டுக்கு அர்ப்­ப­ணித்­தார்.

இக்கப்­பல் விசா­கப்­பட்­டி­னத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்­படும் கிழக்கு மண்­டலக் கடற்­ப­டையைச் சார்ந்­தது.

விசா­கப்­பட்­டி­னம் கடற்­படைத் தளத்தை மேம்படுத்தும் பணி­கள் முடி­யும்வரை காட்­டுப்­பள்­ளி­யில் விக்­ராந்த் கப்­பல் நிறுத்தி வைக்கப்படும்.

கொச்­சி­யி­லி­ருந்து இன்­னும் ஒரு சில நாட்­களில் காட்­டுப்­பள்ளி துறை­மு­கத்­துக்கு இக்கப்பல் வரவுள்ள நிலையில், சென்னை மக்­களுக்கு இதனைப் பார்க்­கும் வாய்ப்பு கிட்டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அண்மையில், அமெ­ரிக்க கடற்­படை­யின் போர்க்கப்­ப­ல், பழுது பார்க்கவும் பரா­ம­ரிப்புப் பணிக்­காக வும் இத்துறை­மு­கத்­திற்கு வந்­தது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!