‘தாய்மொழியில் படிப்பது சிறப்பு’

செங்­கல்­பட்டு: செங்­கல்­பட்டு மாவட்­டம் நென்­மேலி பகு­தி­யில் உள்ள ஸ்ரீ கோகு­லம் பள்­ளி­யில் 2020 தேசிய கல்­விக் கொள்­கைக் கருத்­த­ரங்கு நேற்று நடை­பெற்­றது.

தமி­ழக ஆளு­நர் ஆர். என். ரவி இதில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்து­கொண்டு உரை­யாற்­று­கை­யில், தாய்­மொ­ழி­யில் கல்வி கற்­பது சிறந்­தது என்று கூறி­னார்.

தனி­யார் பள்­ளி­க­ளின் தாளா­ளர்­கள், முதல்­வர்­கள், ஆசி­ரி­யர்­கள் என 1,300க்கும் மேற்­பட்­டோர் இந்­தக் கருத்­த­ரங்­கில் கலந்­து­கொண்­ட­னர். முன்னதாக, புதிய தேசிய கல்­விக் கொள்கை குறித்த புத்­த­கத்தை இவ்­வி­ழா­வில் ஆளு­நர் ஆர். என். ரவி வெளி­யிட்­டார்.

தொடர்ந்து ஆசி­ரி­யர்­கள் மத்­தி­யில் உரையாற்றிய அவர், "இது­வரை இந்­தியாவில் 1960களில் ஒருமுறையும் 1980களில் மறுமுறையுமாக இரண்டு முறை கல்­விக் கொள்­கை­கள் புதிதாக வகுக்கப்பட்டன," என்று கூறினார்.

இப்­பொ­ழுது மூன்­றா­வது முறை­யாக கல்­விக் கொள்கை கொண்டு வரப்­பட்­டுள்­ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தேசிய அள­வில் தற்­போது ஏன் கல்­விக் கொள்கை புதி­தாகத் தேவைப்படுகிறதென்­றால், சுதந்­தி­ரம் கிடைத்து 75 ஆண்­டு­கள் நிறைவடைந்துள்ளன.

"உலக மக்­கள் தொகை­யில் தற்­போது இரண்­டாம் இடத்­தில் உள்­ள இந்­தியா விரை­வில் முதல் இடத்­திற்­கும் வர­லாம்.

"இந்நிலையில், வறுமை ஒழிப்பு குறித்த முயற்சிகளில் நாடு சற்றுப் பின்தங்­கி­யுள்ளது," என்றார் ஆளுநர்.

இந்­தியா பொரு­ளியல் ரீதி­யில் வேக­மாக வள­ரும் நாடாக இருந்து வரு­கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

"இந்­தியாவிற்கு சுதந்­தி­ரம் கிடைத்தபொழுது மகாத்மா காந்­தி­யி­டம், அதை ஏன் கொண்­டா­ட­வில்லை எனக் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த மகாத்மா, ஆங்கிலேயர்கள் இந்­தி­யாவை விட்டு வெளி­யே­றிவிட்­ட­னர். ஆனால் அவர்­கள் நம்­மு­டைய மூளை­யில் இன்­னும் தங்­கி­யுள்­ள­னர். நம் மூளை­யி­லி­ருந்து அவர்­கள் வெளியே செல்ல வேண்­டு­மென்­றால், அவர்­கள் நம்மை ஆட்சி செய்த ஆண்­டு­களில் பாதி­யா­வது தேவைப்­படும் எனக் கூறி­யதை ஆளுநர் சுட்டினார்.

"பிரிட்­டிஷ் அரசு நம்மை ஆட்சி செய்த பொழுது, நம்­மு­டைய கல்வி முறையை அழித்துவிட்­டார்­கள். எனவே நாட்டைக் கட்­ட­மைக்க வேண்­டி­யது இன்­றி­ய­மை­யாததாக உள்­ளது," என்று அவர் கூறினார்.

தற்­பொ­ழுது இந்­தி­யா­வில் பல இடங்களில் தாய்மொழி வழிக் கல்வி இல்லை. நாம் அனைத்­தை­யும் ஆங்­கி­லத்­தில் கற்­றுக்கொண்டு வரு­கி­றோம். பிற­மொழியைக் கற்­றுக்கொள்­வது நல்­லதுதான். ஆங்­கி­லத்­தில் படிப்­பதுதான் சிறப்பு என்றில்லை. பிரான்ஸ், சைனா, ரஷ்யா, ஜெர்­மனி போன்ற நாடு­களில் அவ­ர­வர் மொழி­க­ளிலேயே படித்து வரு­கின்­ற­னர். அறி­வி­யல் பாடத்தைக்கூட தங்கள் மொழி­யில் கற்­றுக் கொள்­கின்­ற­னர். எனவே தாய்­மொ­ழி­யில் படிப்­பது சிறந்தது, இதன்வழி இந்­தி­யா­வின் அறிவுக் களஞ்­சி­யத்தை மீட்­டெ­டுக்க வேண்­டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!