‘புதுச்சேரி வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்பு தரப்படவேண்டும்’

புதுச்­சேரி: புதுச்­சே­ரி­யில் பணி­யாற்­றும் வழக்­க­றி­ஞர்­க­ளுக்கு சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் நீதி­ப­தி­யாக பொறுப்­பேற்­கின்ற வாய்ப்பு வழங்­கப்­பட வேண்­டும் என்று புதுச்­சேரி முதல்­வர் ரங்­க­சாமி கோரிக்கை விடுத்­துள்­ளார்.

புதுச்­சேரி காலாப்­பட்­டில் உள்ள அம்­பேத்­கர் அரசு சட்­டக் கல்­லூ­ரி­யின் பொன்­விழா ஆண்­டுக் கொண்­டாட்­டத்­தின் நிறைவு விழா நேற்று நடை­பெற்­றது.

கல்­லூரி வளா­கத்­தில் நடை­பெற்ற விழா­வில் தலை­மைச் செய­லர் பொறுப்பு வகிக்­கும் பிர­சாந்த் கோயல், உச்ச நீதி­மன்ற நீதி­பதி கள் ராம­சுப்­ர­ம­ணி­யன், சுந்­த­ரேஷ், ஆளு­நர் தமி­ழிசை சவுந்­த­ர­ரா­ஜன், சென்னை உயர் நீதி­மன்­றத் தலைமை நீதி­பதி முனீஷ்­வர் நாத் பண்­டாரி, சென்னை உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி ராஜா ஆகி­யோர் கலந்­து­கொண்­ட­னர்.

சிறப்பு விருந்­தி­ன­ராக உச்ச நீதி­மன்றத் தலைமை நீதி­பதி உதய் உமேஷ் லலித் கலந்­து­கொண்டு பொன்­விழா மலரை வெளி­யிட்­டுச் சிறப்­புரை ஆற்­றி­னார். இந்த விழா­வில் பேசிய முதல்­வர் ரங்­க­சாமி, ''புதுச்­சேரி கட்­டக் கல்­லூரி ஒரு சிறிய பள்­ளி­யில் தொடங்­கப்­பட்டு தற்­போது சுமார் 28 ஏக்­கர் நிலத்­தில் சிறந்த கல்­லூ­ரி­யாக நிமிர்ந்து நிற்­கிறது.

"இக்­கல்­லூ­ரி­யின் முன்­னாள் முதல்­வர் மாத­வன்­ மே­னன் புதுச்­சே­ரி­யில் ஒரு சட்­டப் பல்­க­லைக் கழ­கத்தை நிறு­வ­லாம் என்று யோசனை கூறி­னார். அதற்கான முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அதற்­காக 26 ஏக்­கர் நிலம் அரசு மூலம் ஒதுக்கி கொடுக்­கப்­பட்­டுள்­ளது. விரை­வில் சட்­டப் பல்­க­லைக்­க­ழ­கம் தொடங்­கப்­படும்," என்று தெரி­வித்­தார்.

புதுச்­சே­ரி­யில் பணி­யாற்­று­கின்ற வழக்­க­றி­ஞர்­க­ளுக்கு சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் நீதி­ப­தி­யா­கப் பொறுப்­பேற்­கும் வாய்ப்பு இருந்­தால், அதனை வழங்க வேண்­டும் என்று கோரிக்கை வைக்­கி­றேன்.

இதனை உச்ச நீதி­மன்ற தலைமை நீதி­ப­தி­யும், சென்னை உயர் நீதி­மன்ற தலைமை நீதி­ப­தி­யும் கவ­னத்­தில் வைத்­துக்­கொள்ள வேண்­டும் என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!