தங்கம் கடத்தல்: ‘குருவி’யை தாக்கிய ஐவர் கைது

சென்னை: துபா­யில் இருந்து 400 கிராம் தங்­கத்தை கடத்தி வந்து அதனை உரி­ய­வ­ரி­டம் ஒப்­ப­டைக்­கா­மல் ஏமாற்றி, தலை­ம­றை­வான 'குருவி' பய­ணியை ஒரு விடு­தி­யில் அடைத்து வைத்து, சித்­தி­ர­வதை செய்த ஐந்து பேரைக் காவ­லர்­கள் கைது செய்­த­னர்.

திரு­வள்­ளூர் மாவட்­டம், ஆர்.கே.பேட்­டை­யைச் சேர்ந்­த­வர் ஆனந்­த­ராஜ், 34. இவர் துபா­யில் கடந்த இரு ஆண்­டு­க­ளாக ஓட்டு நராக வேலை­பார்த்து வந்­தார்.

இந்­நி­லை­யில், கடந்த 7ஆம் தேதி துபா­யில் இருந்து தமி­ழ­கம் திரும்­பியபோது, குரு­வி­யாக செயல்­பட்டு துபா­யில் இருந்து 400 கிராம் தங்­கத்­தைக் கொண்டு வந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

தங்­கத்தை உரி­ய­வர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கா­மல், தனது வீட்­டுக்கு எடுத்­துச் சென்றவர் அதன்பின்னர் தலைமறைவாகி விட்டார்.

இத­னால், ஆத்­தி­ர­ம­டைந்த தங்­கத்­தின் உரி­மை­யா­ளர்­கள் ஆனந்­த­ராஜைக் கண்டுபிடித்து, சென்­னைக்கு கடத்தி வந்து, ஒரு விடு­தி­யில் வைத்து சர­மா­ரி­யாக தாக்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து தாக்­கு­த­லில் ஈடு­பட்ட ஐவர் கைதாகினர்.

இது­கு­றித்து ஆனந்­த­ராஜ் கூறு­கை­யில், "துபா­யில் இருந்து சொந்த ஊர் திரும்ப இருந்த நிலை­யில், அங்­கி­ருந்த நபர் ஒரு­வர் 400 கிராம் தங்­கத்தை சென்­னை­யில் தன் உற­வி­னர் இத­யத்­துல்லா என்­ப­வ­ரி­டம் கொடுத்து விடு­மாறு கூறி­னார். அதற்­காக ரூ.30,000 கமி­ஷன் தொகை­ பெற்றுக்கொண்டேன். ஆனால், அந்தப் பொருளை உரி­ய­வ­ரி­டம் கொடுக்கவில்லை," என்றார்.

விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!