செய்திக்கொத்து

யூடியூப் காணொளி சர்ச்சை: சவுக்கு சங்கர் நிரந்தரமாகப் பணிநீக்கம்

சென்னை: யூடியூப் தளத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளைக் காணொளியாகப் பதிவிட்டு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஊழியர் சவுக்கு சங்கர் நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக சங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. முன்னதாக, மாதந்தோறும் 40 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெற்று வரும் அவரை, தமிழக அரசு பணிநீக்கம் செய்ய நீதிமன்றம் பரிந்துரை செய்தது. அதன் பேரில், அவர் நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மதுரையில் சிறப்பாகச் செயல்படும்

'108 ஆம்புலன்ஸ்' சேவை

மதுரை: '108 ஆம்புலன்ஸ்' சேவை மதுரையில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உயிர் காக்கும் இந்தச் சேவையை நடப்பாண்டில் மட்டும் இதுவரை 42 ஆயிரம் பேர் பயன்படுத்தி உள்ளனர். மதுரை மாவட்டத்தில் 12 ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் தொடங்கிய இச்சேவை, தற்போது நன்கு விரிவடைந்து இப்போது 46 ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் செயல்படுகிறது. மேலும், இரண்டு கிலோ மீட்டருக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற நிலை உருவாகி உள்ளது. '108 ஆம்புலன்ஸ்' சேவையில் பணியாற்றும் ஊழியர்களைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர்.

அக்டோபர் 12ஆம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழுக் கூட்டம்

சென்னை: திமுக பொதுக்குழுக் கூட்டம் அக்டோபர் 12ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட உள்ளார். மேலும் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களும் அன்றைய தினம் அறிவிக்கப்படுவர். திமுகவில் மாவட்டச் செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்துள்ளது. இம்மாத இறுதிக்குள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களின் பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னர், கட்சித் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடைபெற வேண்டும். இதையடுத்து, அக்டோபர் 12ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்படும். இம்முறை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டி இருக்காது எனத் தெரிகிறது.

ஒன்றரை ஆண்டுகளில் ஆறு பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்

நாமக்கல்: ஒன்றரை ஆண்டுகளுக்குள் ஆறு பேரை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு, பணம், நகைகளைத் திருடிச் சென்ற பெண்ணை நாமக்கல் காவல்துறையினர் கைது செய்தனர். சந்தியா என்ற அந்த 26 வயது பெண், அண்மையில் மாரியப்பன் என்ற வியாபாரியைத் திருமணம் செய்துகொண்டார். எனினும், திருமணம் முடிந்த இரண்டு தினங்களுக்குப் பின்னர், காலையில் கண்விழித்த மாரியப்பன், சந்தியாவைக் காணாமல் அதிர்ச்சி அடைந்தார். மேலும், அவர் வீட்டில் வைத்திருந்த நகை, பணம் ஆகியவையும் மாயமாகி இருந்தன. கைபேசி மூலமாகவும் சந்தியாவைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அடுத்த சில தினங்களில் சந்தியாவுக்கும் நாமக்கல்லைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கும் திருமணம் நடக்க இருப்பதாகக் கேள்விப்பட்ட மாரியப்பன் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் காவல்துறையில் புகார் அளிக்க, சந்தியாவை மடக்கிப் பிடித்து கைது செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் ஆறு பேரை ஏமாற்றியது தெரிய வந்தது.

தமிழகத்தில் 3.40 கோடி பேர் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை

சென்னை: தமிழகத்தில் 3.40 கோடி பேர் கொரோனா கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் மொத்தம் 4.30 கோடி பேர் கூடுதல் தட்டுபூசி போட்டுக்கொள்ள தகுதி பெற்றவர்கள் என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார். இதுவரை 86.31 லட்சம் பேர் மட்டுமே கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்றும் தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!