புதரில் வீசப்பட்ட 111 கள்ளத்துப்பாக்கிகள் மீட்பு

ஒசூர்: ஓசூர் வனப்­ப­கு­தி­யில் இருந்து 111 கள்­ளத் துப்­பாக்­கி­களை மீட்­டுள்ள வனத்­து­றை­யி­னர், அவற்றை ஓசூர் கூடு­தல் காவல் கண்­கா­ணிப்­பாளா் அர­விந்த், அஞ்­செட்டி காவல் ஆய்­வா­ளர் கும­ரன் ஆகி­யோ­ரி­டம் ஒப்­ப­டைத்­த­னர்.

கிருஷ்­ண­கிரி மாவட்­டம், ஓசூர் வனப்­ப­கு­தி­யில் திரி­யும் யானை உள்­ளிட்ட வன­வி­லங்­கு­க­ளைக் கள்­ளத் துப்­பாக்­கி­கள் வைத்­துள்ள ­வர்­கள் அவ்­வப்­போது வேட்டை யாடி வரு­கின்­ற­னர்.

இத­னைத் தடுக்­கும் வகை­யில், கள்­ளத் துப்­பாக்கி வைத்­தி­ருப்ப வர்­கள் வனத்­துறை அதிகாரி களி­டமோ, ஊர்த் தலை­வர்­க­ளி­டமோ அவற்றை தாமாக முன்­வந்து ஒப்­ப­டைத்­து­வி­ட­வேண்­டும் என்று கடந்த செப்­டம்­பர் மாதத்­தில் ஓசூர் வனக்­கோட்­டத்­தின் வன உயி­ரினக் காப்­பா­ளர் கார்த்­தி­கா­யினி வேண்டு­கோள் விடுத்­தி­ருந்­தார்.

இதன்­பி­ற­கும் யாரே­னும் கள்ளத்­துப்­பாக்கி வைத்­தி­ருப்­பது தெரி­ய­வந்­தால் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் ஒலி­பெ­ருக்கி மூலம் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், ஓசூர், தேன்­கனிக்­கோட்டை, அஞ்­செட்டி, உரி­கம், ஜவ­ள­கிரி, ராயக்­கோட்டை, கிருஷ்­ண­கிரி ஆகிய ஏழு வனப் பகு­தி­கள், மலைக் கிரா­மங்­களைச் சுற்­றி­ வசிக்கும் மக்­களும் பொது­மக்களும் ஊர்த் தலை­வர்­களிடமும் ஆங்­காங்கே புதர்களிலும் வீசி விட்டுச் சென்­றி­ருந்த 111 நாட்­டுத் துப்­பாக்­கி­கள் மீட்­கப்­பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!