ஊட்டச்சத்து குறைபாட்டால் 111,000 குழந்தைகள் பாதிப்பு மா. சுப்பிரமணியன்: பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் விநியோகம்

சென்னை: தமி­ழ­கத்­தில் ஒரு லட்­சத்து 11,000 குழந்­தை­கள் ஊட்­டச்­சத்து குறை­பாட்­டால் பாதிக்­கப்­பட்­டுள்ளதாக மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­மணி­யன் தெரி­வித்துள்ளார்.

இந்­தக் குறை­பாட்­டைப் போக்கும் வகையில் ஊட்டச்சத்து பெட்டகங் கள் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், குழந்தைகளுக்கு பெற்றோர் தமிழில் பெயர் வைக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.

சென்னை சைதாப்­பேட்­டை­யில் உள்ள ஒரு திரு­மண மண்­ட­பத்­தில், 285 கர்ப்­பி­ணிப் பெண்­க­ளுக்கு சமு­தாய வளை­காப்பு நிகழ்ச்சி நடை­பெற்­றது.

அதில் பங்­கேற்ற கர்ப்­பிணிப் பெண்­க­ளுக்கு மாலை, வளை­யல் அணி­வித்து, புடவை, வளை­யல், பூ, பழம், மஞ்­சள், சந்­த­னம், கண்­ணாடி, தட்டு ஆகியவை அடங்­கிய சீர்­வ­ரி­சைத் தட்­டு­களை அமைச்­சர் மா. சுப்­பிரமணி­யன், சமூக நலத்­துறை அமைச்­சர் கீதா ஜீவன் உள்­ளிட்­டோர் வழங்­கி­னர்.

நிகழ்ச்­சி­யில் பேசிய மா.சுப்­பி­ர­மணி­யன், "மாநிலம் முழு­வ­தும் சத்துக் குறை­பாட்டுடன் உள்ள குழந்­தை­கள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 111,000 குழந்­தை­களுக்கு­ சத்துக் குறை­பாடு இருப்­பது கண்­டறி­யப்­பட்டுள்ளது. இவர் களில், 43,000 பேருக்கு இதயக் கோளாறு, சிறுநீா் கழிப்­ப­தில் பிரச் சினை உள்ளிட்ட ஏதே­னும் ஒரு பாதிப்பு உள்ளதும் தெரியவந்துள்ளது.

"இப்பாதிப்புகளுக்கு உகந்த சிகிச்சைகளை வழங்­குவதற்கும் அரசு முன்­வந்துள்ளது.

"அத்துடன், ­சத்துக் குறை­பாடுள்ள குழந்­தை­க­ளுக்கு பேரீச்­சம்­ப­ழம், வேர்க்­கடலை உள்­ளிட்ட பல்­வேறுவிதமான ஊட்­டச்சத்து பொருள்­கள் அடங்கிய பெட்­ட­கங்­களும் வழங்­கப்­பட்­டு வருகின்றன," என்றும் அமைச்சர் சொன்னார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழில் பெயர் வைக்கும்படி யாரை யும் கட்டாயப்படுத்த முடியாது. வளை­காப்­பில் பங்­கேற்­றுள்ள பெண்­கள் தங்­க­ளுக்கு பிறக்­கும் குழந்­தை­க­ளுக்கு தமி­ழில் பெயா் வைக்கவேண்­டும் என்­பது எனது வேண்­டு­கோள். விரைவில் தமிழில் பெயர் வைத்தவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது," என்றும் அவர் கூறினார்.

சென்னையில் தேசிய ஊட்டச்சத்து வார விழாவையொட்டி சமூக நலத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக வளைகாப்பு விழாவில் 285 கர்ப்பிணிப் பெண்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு மாலை, வளை­யல் அணி­வித்து, புடவை, பழங்களுடன் சீர்­வ­ரி­சைத் தட்­டுகளும் வழங்கப்பட்டன. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!