ஆதிச்­ச­நல்­லூ­ரில் அருங்­காட்­சி­ய­கப் பணிகள்

தூத்­துக்­குடி: ஆதிச்­ச­நல்­லூ­ரில் மத்­திய தொல்­லி­யல் துறை சார்­பில் நடந்த முதற்­கட்ட அக­ழாய்­வுப் பணி நிறை­வ­டைந்­துள்­ளது. மூன்று இடங்­களில் நடந்த இந்­தப் பணி­யில் நூற்­றுக்­க­ணக்­கான முது­மக்­கள் தாழி­கள், இரும்பு, வெண்­க­லம், தங்­கம், மண்­பாண்­டம் உட்­பட பல பொருள்கள் கிடைத்­துள்­ளன.

அவற்றை உள்­ளது உள்­ள­ப­டியே காட்­சிப்­ப­டுத்­தும் வகை­யில் உலகத் தர அருங்­காட்­சி­ய­கம் அமைக்க பணி­கள் தொடங்கியுள்­ளன.

ஆதிச்­ச­நல்­லூர் பரம்பை (மண் மேடு) சுற்றி 114 ஏக்­க­ரில் இரும்பு வேலி அமைக்­கும் பணி­யும் நடந்து வரு­கிறது. இந்­திய அள­வி­லான சிறப்பு வல்­லு­நர்­கள் ஆதிச்­ச­நல்­லூர் வந்து, இங்கு கிடைத்த பொருள் களைச் சோத­னை­யிட்­ட­னர்.

வெளி­நாட்­டில் உள்ள ஆதிச்­ச­நல்­லூர் பொருள்­களைக் கொண்டு வந்து காட்­சிப்­ப­டுத்­த­வும் முயற்சி­கள் இடம்பெற்று வரு­கின்­றன.

இத­னி­டையே, ஆதிச்­ச­நல்­லூர் முதற்­கட்ட அக­ழாய்­வுப் பணி பற்றி கருத்து தெரி­வித்த திருச்சி மத்­திய தொல்­லி­யல் துறை மண்­டல இயக்­கு­நர் அருண்­ராஜ், "இது­வரை நடந்த அக­ழாய்வு சம்­பந்­தப்­பட்ட பொருள்களை ஆவ­ணப்­ப­டுத்­தும் பணி தொடர்ந்து நடக்கும். இங்கு முற்­கால மக்­க­ளின் வாழ்­வி­டத்தை தேடி அக­ழாய்­வுப் பணியை விரை­வில் தொடங்க உள்­ளோம்," என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!