செய்திக்கொத்து

20,000 கிலோ அரிசி பறிமுதல்

குடியாத்தம்: கர்நாடகாவின் மைசூர் நகருக்குக் கடத்த முயன்ற 20,000 கிலோ நியாயவிலைக் கடை அரிசியை காவல்துறை பறிமுதல் செய்தது. வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஒரு லாரியை நிறுத்தி விட்டு ஓட்டுநர் தப்பியோடினார். லாரியில் 20,000 கிலோ அரிசி இருந்தது. குடியாத்தத்திலிருந்து கர்நாடகா மாநிலம் மைசூருக்கு அந்த அரிசி கடத்த இருந்ததாகத் தெரியவந்தது. அரிசியையும் லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மோசடி: நைஜீரியர் கைது

திருச்சி: திருச்சியைச் சேர்ந்த முத்து இருளப்பன், 61, என்ற ஓய்வு பெற்ற முதியவருக்கு வருமான வரியைத் திரும்பப் பெறலாம் என்று ஆசைகாட்டி, அவரின் ரகசிய விவரங்களைப் பெற்று, அவரின் கணக்கில் இருந்து 14.50 லட்சம் ரூபாயை இணையம் வழி ஒருவர் எடுத்துவிட்டார்.

புலன்விசாரணைகளை அடுத்து, இணையக் குற்றச்செயல் தடுப்புத் துறை அதிகாரிகள் பெங்களூரு கம்மனஹள்ளி சென்று, அங்கு பதுங்கியிருந்த நைஜீரியாவைச் சேர்ந்த ஐ பெங்காசி ஒகோமா, 41, என்பவரைக் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.

இரும்பு திருடிய 11 பேர் கைது

கடலூர்: கடலூரை அடுத்த பெரியக்குப்பத்தில் நாகார்ஜுனா ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான இரும்புப் பொருள்களைத் திருடிய 11 பேர் பிடிபட்டனர். குட்டி வேன் வாகனம், ஆறு மோட்டார்சைக்கிள்களும் பிடிபட்டன.

நாகார்ஜுனா ஆயில் கார்ப்பரேஷன், இருபது ஆண்டுகளுக்கு முன், 850 ஏக்கரில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது. ஆனால் 2011ஆம் ஆண்டில் புயல் வீசியதை அடுத்து பணிகள் நின்றுபோயின.

கட்டுமானப் பணிக்காகக் கொண்டுவரப்பட்ட இரும்பு தளவாட பொருள்கள், தாமிரக் கம்பிகள் எல்லாம் திறந்த வெளியில் கிடக்கின்றன. அவை அப்போதைக்கு அப்போது திருட்டுப் போகின்றன. அதைத் தடுக்க அந்த வட்டார கிராமங்களின் முகப்புகளில் சோதனைச்சாவடி அமைத்து, காவல்துறை வாகனச் சோதனை நடத்தி வருகிறது.

70,000 ரயில் பெட்டிகள் சாதனை

சென்னை: சென்னை பெரம்பூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்), பயணிகளின் தேவைக்கு ஏற்ப, காலத்துக்கு ஏற்றபடி அதிநவீன ரயில் பெட்டிகள், சுற்றுலாவுக்கான ரயில் பெட்டிகள் உள்பட 50 வகைகளில் 600 வடிவமைப்புகளில் ரயில் பெட்டிகளைத் தயாரித்து வருகிறது.

இந்த ஆலை 1955ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை 70,000 ரயில் பெட்டிகளைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது. இது, அண்மையில் 3வது வந்தே பாரத் வேக ரயில் பெட்டிகளைத் தயாரித்து நாட்டிற்கு அர்ப்பணித்தது.

பாம்பன் பாலத்திற்கு வயது 35

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துடன் ராமேஸ்வரம் தீவை இணைப்பதில் பாம்பன் கடல் நடுவே அமைந்துள்ள ரயில் பாலமும் அதனை ஒட்டி அமைந்த தரைச்சாலை பாலமும் முக்கிய பணியாற்றுகின்றன. பாம்பன் தரைச்சாலை பாலத்தை 1988ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி திறந்து வைத்தார். கடலுக்குள் 79 தூண்களைக் கொண்டு கட்டப் பட்டு உள்ள இந்தப் பாலத்திற்கு நேற்று 35வது வயது தொடங்கியது. இந்தப் பாலத்தை ரூ.15 கோடி செலவில் சீரமைக்க இப்போது பணிகள் நடந்து வருகின்றன.

3,500 சாலைகளை 15 நாளில் சீரமைக்க தீவிர பணிகள்

சென்னை: சென்னை குடிநீர் வாரியம், மின்சார வாரியம் சார்பில் சாலைகளைத் தோண்டும் பணிகள் நடக்கின்றன. சென்னை மணப்பாக்கத்தில் மட்டும் 3,500 சாலைகள் சேதம் அடைந்துள்ளன.

இதில் சென்னை குடிநீர் வாரியம் மூலம் 1,380 சாலைகளும் மின்சார வாரியம் மூலம் 500 சாலைகளும் தோண்டப்பட்டு சேதம் அடைந்துள்ளன.

இந்த 3,500 சாலைகளும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பு இன்னும் இரண்டு வாரங்களில் சீரமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீரமைப்புப் பணிகளில் கால்வாசி முடிந்துள்ளன. இதர பணிகள் மும்முரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!