ஏழாண்டு காலப் போராட்டம்; தீண்டாமைச் சுவர் அகற்றம்

திரு­வள்ளூர்: ஏழு ஆண்­டு­களுக்கு முன்பு கட்­டப்­பட்ட தீண்­டா­மைச் சுவரை அதி­கா­ரி­கள் இடித்து அகற்­றி­னர்.

இதை­ய­டுத்து, திரு­வள்­ளூர் மாவட்­டம், தோக்­க­மூ­ரில் காவல்­து­றை­யி­னர் தீவிர பாது­காப்பு, கண்­கா­ணிப்­புப் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

கும்­மி­டிப்­பூண்டி அருகே உள்ள தோக்­க­மூர் ஊராட்­சி­யில் சுமார் இரண்­டா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட குடும்­பங்­கள் வசிக்­கின்­றன.

தோக்­க­மூ­ரில் மட்­டும் நூற்­றுக்­கும் மேற்­பட்ட பட்­டி­ய­லின குடும்­பங்­கள் வசித்து வரும் நிலை­யில், அவர்­களில் பெரும்­பா­லா­னோர் கூலி வேலை பார்த்து வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், பட்­டி­ய­லின மக்­கள் வசிக்­கும் பகு­திக்­கும் தோக்­க­மூர் திரௌ­பதி அம்­மன் கோவி­லுக்­கும் இடையே உள்ள மூன்று ஏக்­கர் பரப்­ப­ள­வில், பட்­டி­ய­லின மக்­கள் தங்­கள் கால்­ந­டை­களை மேய்த்து வந்­த­னர். மேலும், அதில் ஓர் பகுதி நடை­பா­தை­யா­க­வும் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்­நி­லை­யில், அந்த மூன்று ஏக்­கரை பட்­டி­ய­லின மக்­கள் பயன்­ப­டுத்த முடி­யாத வகை­யில், ஒரு பிரி­வி­னர், 90 மீட்­டர் நீளம், எட்டு அடி உய­ரத்­துக்கு தடுப்­புச் சுவர் ஒன்றை கடந்த 2015ஆம் ஆண்டு அமைத்­த­னர். இது தீண்­டா­மைச் சுவர் என்று கூறிய பட்­டி­யலின மக்­கள், அச்­சு­வரை அகற்ற வேண்­டும் என வலி­யு­றுத்தி வந்­த­னர். ஏழு ஆண்டு கால­மாக பல போராட்­டங்­கள் நடந்­துள்ள நிலை­யில், அந்த தீண்­டா­மைச் சுவர் அகற்­றப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!