சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு கடத்திய ஆறு கிலோ தங்கநகைகள் பறிமுதல்

கோயம்­புத்­தூர்: வெளி­நா­டு­களில் இருந்து தமி­ழ­கத்­தின் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்­புத்­தூர் ஆகிய அனைத்­து­லக விமான நிலை­யங்­க­ளுக்கு தங்­கம் கடத்தி வரப்­படும் சம்­ப­வங்­கள் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், சிங்­கப்­பூ­ரில்­இருந்து கோவைக்கு கடத்தி வரப்­பட்ட ரூ.2 கோடியே 94 லட்சம் மதிப்­பி­லான 5.6 கிலோ தங்க நகை­களை கோவை விமான நிலைய வரு­வாய்த் துறை புலனாய்வு அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர்.

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமா­னம் மூலம் கோவை­யில் வந்­தி­றங்­கிய ஆறு பய­ணி­க­ளின் உட­மை­களை அதி­கா­ரி­கள் சோதனை செய்­த­னர்.

அப்­போது, இரு பய­ணி­கள் தங்­க­ளது உள்­ளா­டை­கள், சட்­டைப் பைகள், காற்­சட்டை ஆகி­ய­வற்­றில் 5.6 கிலோ எடை­கொண்ட தங்­கச் சங்­கி­லி­கள், வளை­யல்­களை மறைத்து கடத்­தி­வந்­தது கண்டு பிடிக்­கப்­பட்­டது.

விசா­ர­ணை­யில் அவர்­கள் சென்­னை­யைச் சேர்ந்த முக­மது அப்­சல், 32, திருச்­சி­யைச் சேர்ந்த கிருஷ்­ணன், 66, என்­பது தெரியவந்­தது.

முக­மது அப்­சல் ஒரு கோடி ரூபாய்க்­கும் அதி­க­மான தங்­கத்தை கடத்தி வந்­த­தால், அவரை வரு­வாய்த் துறை புல­னாய்வு அதி­கா­ரி­கள் கைது செய்­த­னர். பின்­னர் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்தி பிணை­யில் வெளி­வர முடி­யாத வழக்­கின்­கீழ் கோவை மத்­திய சிறை­யில் அடைத்­த­னர்.

ரூ.50 லட்­சம் மதிப்­பி­லான தங்­கத்தை கடத்தி வந்த கிருஷ்­ணனை கைது செய்து பிணை­யில் விடு­வித்­த­னர்.

மீத­முள்ள நான்கு பய­ணி­களும் அதி­கா­ரி­க­ளால் எச்­ச­ரிக்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்­ட­னர்.

இந்­த தங்கநகைகள் கடத்த லில் வேறு யாருக்­கேனும் தொடர்பு உள்­ளதா எனவும் அதி­கா­ரி­கள் தொடர்ந்து விசா­ரணை நடத்த உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!