தமிழிசை கிண்டல்: ராஜராஜ சோழன் இந்து இல்லையா, சிரிப்பு வருது

சென்னை: பொன்­னி­யின் செல்­வன் திரைப்­ப­டம் வெளி­யாகி ராஜ­ராஜ சோழன் பற்­றிய பல்­வேறு விமர்­ச­னங்­கள் எழுந்­துள்­ளன.

இயக்­கு­நர் வெற்றி மாற­னும் கமல்­ஹா­ச­னும் ராஜ­ராஜ சோழன் இந்து அல்ல என்று கூறி புதிய சச்­ச­ரவை கிளப்பி உள்­ள­னர்.

இந்த நிலை­யில் புதுவை துணை­நிலை ஆளு­நர் தமி­ழசை சவுந்­த­ர­ரா­ஜன், அவர்­க­ளது விமர்­ச­னத்­தைக் கேட்டு சிரிப்பு வரு­வ­தா­கக் கூறி­யுள்­ளார்.

கோவை­யில் பல்­வேறு நிகழ்ச்­சி­களில் பங்­கேற்ற தெலுங்­கானா ஆளு­ந­ரு­மான தமி­ழிசை சௌந்­த­ர­ரா­ஜன் நேற்று காலை விமா­னம் மூலம் கோவைக்கு வந்­தார்.

கோவை விமான நிலை­யத்­தில் அவர் செய்­தி­யா­ளர்­க­ளுக்­குப் பேட்டி அளித்­தார்.

அப்­போது ராஜ­ராஜ சோழன் குறித்து இயக்குநர் வெற்­றி­மா­றன் சொன்ன இந்து தொடர்­பான கருத்­துக்கு கமல்­ஹா­சன் ஆத­ரவு கொடுத்து இருப்­பது குறித்த கேள்வி எழுப்­பப்­பட்­டது.

அது குறித்து பேசிய தமி­ழிசை சௌந்­த­ர­ரா­ஜன், "தஞ்சை பெரிய கோவிலைப் பார்த்து வளர்ந்­த­வள் நான், இதில் உள்ள அடை­யா­ளங்­களை மறைக்க பார்க்­கின்­ற­னர். கலா­சார அடை­யா­ளங்­கள் மறைக்­கப்­பட்­டால் எல்­லோ­ரும் ஒன்­றி­ணைந்து குரல் கொடுப்­போம். ஏற்கெ­னவே பல அடை­யா­ளங்­கள் மறைக்­கப்­பட்டு இருக்­கின்­றன. இந்து கலா­சார அடை­யா­ளத்தை தேவைக்­காக திருப்பிக் கொண்­டால் அதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. தமி­ழர்­க­ளின் அடை­யா­ளம் இறை வழி­பாடு. சைவமும், வைண­வ­மும் இந்து மதத்­தின் அடை­யா­ளம்தான். இந்து அடை­யா­ளத்­தினை மறைக்க முற்­ப­டு­கின்­ற­னர். அப்­படி இந்து அடை­யா­ளங்­களை மறைக்க முற்­பட்­டால் அது சரி­யாக இருக்­காது," என்­றார்.

முன்­ன­தாக இயக்­கு­நர் வெற்றி மாறன் ஒரு நிகழ்ச்­சி­யில் கலந்து பேசி­ய­போது, தமிழ் மன்­ன­ரான ராஜ­ராஜ சோழனை இந்து மன்­னர் என்று மாற்றி விட்­டார்­கள் என்று பேசவே சர்ச்சை வர ஆரம்­பித்­தது.

இது பற்­றிய எதிர் கருத்­துக்­களும், ஆத­ரவு கருத்­து­களும் இணை­யத்­தில் தொடர்ந்து பகி­ரப்­பட்டு வந்­தன. இந்த நிலை­யில் நடி­கர் கமல்­ஹா­சன் 'பொன்­னி­யின் செல்­வன்' படத்தை நேற்று முன்­தி­னம் சென்­னை­யில் பார்த்து ரசித்­தார். அவ­ரு­டன் நடி­கர்­கள் விக்­ரம், கார்த்தி ஆகி­யோ­ரும் பார்த்­த­னர். படம் பார்த்து விட்டு நடி­கர் கமல்­ஹா­சன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

"போர்க்­கள காட்­சி­களை படம் பிடிப்­பது என்­பது சாதா­ர­ண­மான விஷ­யம் அல்ல. அதில் இருக்­கும் கஷ்­டம் என்ன என்­பது எனக்கு தெரி­யும். மக்­கள் இது நம் படம் என்­கிற மன­நி­லை­யில் படத்­திற்கு ஆத­ரவு கொடுத்து வரு­கி­றார்­கள். இந்து மதம் என்­கிற பெயர் ராஜ­ராஜ சோழன் காலத்­தில் கிடை­யாது.

"சைவம், வைண­வம், சம­ணம் என்றே இருந்­தது. அப்­போது மதங்­கள் வெவ்­வேறு இருந்­தன. பிரிட்­டிஷ்­கா­ரர்­கள் வந்த பிற­கு­தான் தூத்­துக்­கு­டியை டூட்­டு­கு­ரின் என்று சொல்­வது போல நம்மை இந்து என்று அழைத்­தார்­கள் என்று கூறி சர்ச்­சை­யைக் கிளப்­பி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!