அதிகரிக்கும் டெங்கிக் காய்ச்சல்: கவனமாக இருக்க வலியுறுத்து

சென்னை: தமி­ழ­கத்­தில் உள்ள 38 மாவட்­டங்­களில் ஏறக்­கு­றைய 22 மாவட்­டங்­களில் ஆங்­காங்கே மழை பெய்து வரு­கிறது.

இதனால், ஏடிஸ் கொசுக்களின் பெருக்கம் அதிகரிக்கும் என்பதால் அடுத்த மூன்று மாதங்­களில் டெங்­கிக் காய்ச்சலால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்ணிக்கை மேலும் அதி­க­ரிக்கும் என மருத்­துவ நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

இச்சூழலில், ­மக்­கள் அனைவரும் பாதுகாப்பாகவும் கவ­ன­மாகவும் இருப்பது முக்கியம் என பொது சுகா­தா­ரத்­துறை கூறியுள்ளது.

மாநிலத்தில் நடப்­பாண்­டில் ஜன­வரி முதல் ஜூலை மாதம் வரை 2,915 பேர் டெங்­கிக் காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­ட­னர்.

கடந்த ஆகஸ்ட் மாதத்­தில் 481 பேர் பாதிக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், செப்­டம்­ப­ரில் இப்பாதிப்பு ­572ஆக அதி­க­ரித்­துள்­ளது.

மாநி­லத்­தில் கொரோனா கிரு­மிப் பர­வல் குறைந்து வரும் நிலை­யில், பரு­வக்­கால காய்ச்சலுடன் டெங்­கிக் காய்ச்­ச­ல் பாதிப்பும் அதிகரித்­து வருகிறது.

இந்நிலையில், இப்பாதிப்­பைக் கட்­டுப்­ப­டுத்த தீவிர நட­வ­டிக்கைகள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக பொது சுகா­தா­ரத் துறை இயக்­கு­நர் செல்­வ­வி­நா­ய­கம் தெரி­வித்­துள்­ளார்.

"மழை பெய்­யத் தொடங்­கி­யுள்­ள­தால் நீரில் உற்­பத்­தி­யா­கும் ஏடிஸ் கொசுக்­க­ளின் பெருக்­கம் அதி­க­ரிக்­கும். இத­னால், இன்­னும் இரண்டு, மூன்று மாதங்­களுக்கு டெங்கி பாதிப்பு சற்று அதி­க­மாக இருக்­கும் என்பதால், இதனைக் கட்­டுப்­படுத்த பள்­ளிக் கல்­வித்­துறை, உள்­ளாட்சி அமைப்­பு­களு­டன் இணைந்து நடவடிக்கைகள் எடுத்து வரு­கிறோம்.

"கொவிட்-19 தடுப்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்ள பணி­யா­ளர்­கள் டெங்­கித் தடுப்­புப் பணி­யி­லும் ஈடுபடுத்­தப்­பட்டு வரு­கின்­ற­னர்," என்று அவர் கூறி­யுள்­ளார்.

"டெங்கி சிகிச்­சைக்குத் தேவை­யான மருந்­து­கள் அர­சி­டம் தயாராக உள்­ளன. திறந்­த­வெ­ளி­யில் உள்ள தண்­ணீர்த் தொட்டி, ஆட்­டுக்­கல், உடைந்த மண்­பாண்­டங்­கள், தேங்­காய் ஓடு, வாளி ஆகி­ய­வற்­றில் மழை­நீர் தேங்­கி­னால் அவற்­றில் கொசுக்­கள் உற்­பத்­தி­யா­கும் என்ப தால் அது­போன்ற பொருள்­களை அகற்றவேண்­டும்," என்று அவர் கேட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!