அமைச்சர் நேரு: சென்னையில் 80% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்தன

சென்னை: பரு­வ­ம­ழையை எதிர்­கொள்­ளும் வித­மாக சென்­னை­யில் நடை­பெற்று வரும் மழை­நீர் வடி­கால் பணி­கள் 80 விழுக்­காடு நிறைவுபெற்று இருப்­ப­தாக நக­ராட்சி நிர்­வா­கத்­துறை அமைச்­சர் கே.என்.நேரு தெரி­வித்­தார்.

மழைக்­கா­லத்­தில் குடி­யி­ருப்­புப் பகு­தி­களில் தேங்­கும் தண்­ணீரை அகற்ற 791 இடங்­களில் பம்பு செட் அமைக்­கப்­பட்டு இருப்­ப­தாக அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசும்­போது குறிப்­பிட்­டார்.

"தமி­ழ­கத்­தில் வட­கி­ழக்கு பரு­வ­மழை தொடங்க உள்ள நிலை­யில், தேங்­கும் மழை­நீரை அகற்­று­வ­தற்­காக சம்­பந்­தப்­பட்ட இடங்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன. எந்த நிலை­யில் தண்­ணீர் தேங்­கி­னா­லும், அதனை உட­ன­டி­யாக அகற்றுவதற்கு முன்­னேற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

"வடி­கால் பணி­க­ளைப் பொறுத்­த ­வ­ரை­யில், ஒவ்­வொரு தெரு­வி­லும் பெரு­ந­கர தொலை­பேசி, மின்­சார இணைப்­பு­கள் செல்­கின்­றன. இதைக் கருத்­தில்­கொண்டு பணி­கள் நடை­பெ­று­வ­தால், ஆங்­காங்கே சில பணி­கள் கிடப்­பில் இருக்­கின்­றன," என்­றார் அமைச்­சர் கே.என்.நேரு.

வடி­கால் பணிக்கு தோண்­டப்­பட்ட பள்­ளங்­களை அப்­ப­டியே விட்டு­வி­டக்­கூ­டாது என்­றும் அங்கு பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்­றும் முதல்­வர் அறி­வு­றுத்தி இருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், வடி­கால் பணி நடை­பெ­றும் இடங்­க­ளுக்கு அதி­கா­ரி­கள் நேரில் சென்று ஆய்வு செய்து, பாது­காப்பு மேற்கொண்டுள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

"சென்­னை­யில் மீத­முள்ள 20% மழை­நீர் வடி­கால் பணி­கள் விரை­வில் முடிக்­கப்­பட்­டு­வி­டும். இன்­னும் மூன்று மாதங்­களில் அனைத்து பணி­களும் முடிக்­கப்­பட்டு, எல்­லா­வற்­றை­யும் சரி­செய்­து­வி­டு­வோம்," என்­றார் அமைச்­சர் கே.என்.நேரு.

இதற்­கி­டையே, சென்­னை­யில் நடை­பெற்று வரும் மழை நீர் வடி­கால் பணி­களை முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேரில் ஆய்வு செய்­தார். அப்­போது அதி­கா­ரி­க­ளுக்கு அவர் உரிய உத்­த­ர­வு­க­ளைப் பிறப்­பித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!