சுற்றுச்சூழல் மாசுபாட்டால் 10 கோடி பறவைகள் இறப்பு

நாகர்­கோ­வில்: சுற்­றுச்­சூ­ழல் மாசு­படு­வது அதி­க­ரித்து வரு­வ­தன் கார­ண­மாக, ஆண்­டு­தோ­றும் பத்து கோடி பற­வை­கள் இறப்­ப­தாக நாகர்­கோ­வில் அருகே உள்ள புத்­த­ளம் பற­வை­கள் சர­ணா­ல­யத்­தில் நடத்­தப்­பட்ட உல­கப் புலம் பெயர்ந்த பற­வை­கள் தின­வி­ழா­வில் தெரி­விக்­கப்­பட்­டது.

இவ்­வி­ழா­வில் மாவட்ட வன அலு­வ­லர் இளை­ய­ராஜா பேசுகை­யில், "சூரிய ஒளியின் அடிப்­படை­யில்­தான் பறவைகள் பறந்து செல்­கின்­றன. தற்­போது இந்த ஒளி­யி­லும் மாசு­பாடு ஏற்­படுவதால் பற­வை­கள் திசை மாறி கட்­ட­டங்களில் மோதி இறக்­கின்­றன. ஆண்­டுக்கு பத்து கோடி பற­வை­கள் இதுபோல் இறப்­ப­தா­கப் புள்ளிவிவ­ரங்­கள் சுட்­டிக் காட்­டி­யுள்­ளன. இது கவ­லைக்­கு­ரி­யது. இது­தொ­டர்­பான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தவே இந்தப் பற­வை­கள் தின விழா கொண்­டா­டப்­ப­டு­கிறது," என்­றார்.

புத்­த­ளம், சுசீந்­த­ரம், மணக்­குடி, சாமித்­தோப்பு உள்­பட பல்­வேறு பகுதி­களில் நீர்­நி­லை­கள் அதி­க­மாக உள்­ள­தால், அங்கு ஏரா­ள­மான பறவைகள் வந்து செல்­வது வழக்­கம்.

இந்­தியா மட்­டு­மன்றி வெளி நாடு­களில் இருந்­தும் பற­வை­கள் வருகின்றன. ரஷ்யா, சைபீரியா உட்பட வெளி­நா­டு­களில் இருந்து வரும் பற­வை­கள் கண்­ட­றி­யப்­பட்டு, அவற்­றுக்கு அடை­யா­ளமிட்டனர். பின்­னர் ஃபிளமிங்கோ, ஆலா, கொசு உள்­ளான் ஆகிய பற­வை­களை மாவட்ட ஆட்­சி­யர் அர­விந்த் மீண்­டும் பறக்கவிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!