நான்கு பேரைத் திருமணம் செய்து பெண் பணம் மோசடி

சேலம்: ஏற்­கெ­னவே மூன்று திரு­ம­ணங்­கள் செய்­ததை மறைத்து, நான்­கா­வ­தாக ஒரு­வ­ரி­டம் நய­மா­கப் பேசி அவ­ரைத் திரு­ம­ணம் செய்து நகை, பணத்தை பெண் ஒரு­வர் திரு­டிச் சென்­றுள்­ளார்.

இந்தப் புகாரை அடுத்து பணத்தைத் திரு­டிச் சென்ற பெண்­ணை­யும் ஒரு ஆணை­யும் காவ­லர்­கள் கைது செய்­துள்­ள­னர்.

சேலம் மாவட்­டம், ஆத்­தூர் அருகே உள்ள நர­சிங்­க­பு­ரம் பகுதி யில் தனது பெற்­றோ­ரு­டன் வசித்து வரு­கி­றார் ஸ்டீ­பன், 24. இவர் பட்­ட­யப்­ப­டிப்பை முடித்துவிட்டு மளி­கைக் கடை நடத்தி வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், ஸ்டீ­ப­னு­டைய ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்­ட­கி­ராம் வழி சரண்யா என்ற பெண் ஒரு­வர் அறி­மு­க­மாகி, அடிக்­கடி பேசி வந்­துள்­ளார். தான் சேலம் கிச்­சிப்­பா­ளை­யத்­தில் வசித்து வரு­வ­தா­க­வும் கூறி­யுள்­ளார்.

இதையடுத்து, இரு­வ­ரும் சமூக வலைத்­த­ளங்­கள் மூலம் தொடர்ந்து பழகிவந்­துள்ளனர்.

இந்­நி­லை­யில், ஒரு சம­யத்­தில் சரண்யா ஸ்டீ­ப­னி­டம் தன்­னைத் திரு­ம­ணம் செய்­து­கொள்­ளும்­படி வற்­பு­றுத்தி உள்­ளார்.

பெற்­றோ­ரின் சம்­ம­தத்­து­டன் கடந்த மே மாதம் இவர்­க­ளது திரு­ம­ணம் நடந்­தது.

கடந்த நான்கு மாதமாக ஸ்டீ­பன் வீட்­டில் வசித்து வந்த சரண்யா, அடிக்­கடி வீட்­டை­விட்டு வெளியே சென்று வந்துள்ளார்.

இந்­நி­லை­யில், கடந்த மூன்று நாள்­க­ளுக்கு முன்பு ஸ்டீ­பன் வீட்டி­லி­ருந்து சரண்யா திடீரென மாய­மா­னார். அவ­ரது கைபே­சி­ தொடர் பும் துண்டிக்கப்பட்­டி­ருந்­தது.

அத்­து­டன், வீட்­டில் இருந்து 30 பவுன் தங்க நகை­கள், ரூ.2 லட்­சம் ரொக்­கப் பணம் திரு­டப்­பட்­டி­ருந்த தும் தெரி­ய­வந்­தது.

இதுகுறித்து ஆத்­தூர் நகர காவல்நிலை­யத்­தில் புகார் அளிக் கப்பட்டது. சரண்­யா­வின் கைபேசி எண்ணை வைத்து அவர் சேலத்­தில் இருப்­பதைக் கண்டுபிடித்து காவலர்கள் விசாரித்தனர்.

சரண்­யா­விற்கு ஏற்கெ­னவே சேலத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்று மூன்று மகன்­களும் பேரப்­பிள்­ளை­களும் இருப்­ப­து தெரி­ய­வந்­தது.

அதன்­பி­றகு சென்­னை­, கோவை­யைச் சேர்ந்த இரு ஆடவர்களுடன் திரு­ம­ணம் நடை­ெபற்­ற­தா­க­வும் நான்காவதாக ஸ்டீ­பனுடன் திரு­ம­ணம் நடை­பெற்­ற­தா­க­வும் கூறி யுள்ளார். கோவை­யைச் சேர்ந்த ரகு­வ­ரன் என்­ப­வர் சரண்­யா­வுக்கு தாய் மாம­னாக நடித்­த­தாகவும் ஒப்­புக்­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!