இரு தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பலி

ஊட்டி: ஊட்டி அருகே தடுப்புச்சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டிய இரு தொழிலாளர்கள் மண் திடீரென சரிந்ததில் அதில் புதைந்து உயிரிழந்தனர். இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள மஞ்சனகொரை பகுதியில் பத்மினி என்பவருக்காக வீடு கட்டும் பணி நடந்து வந்தது.

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த எட்டு ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

வீடு கட்டும் இடத்திற்கு அருகே 35 அடி நீளம், 15 அடி உயரத்திற்கு தடுப்புச்சுவர் கட்டுவதற்குத் திட்ட மிட்டு அதன்படி, நேற்று முன்தினம் காலை முதல் கீழ்ப்புறத்தில் மண் தோண்டும் பணியில் சேட், வேலு, முருகன், சக்தி ஆகிய நான்கு ஊழியர்களும் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென 15 அடி உயர மண் திட்டு சரிந்து கீழ்புறத்தில் வேலை செய்துகொண்டிருந்த சேட், வேலு ஆகியோர் மீது விழுந்து முழுமையாக மூடியது. மற்ற இரு ஊழியர்களும் குழிக்கு வெளியே பாய்ந்து குதித்து உயிர் தப்பினர்.

தீயணைப்புத்துறை மீட்புக் குழுவினர் சுமார் அரை மணி நேரம் போராடி உடல்களை மீட்டனர்.

மண்ணில் புதைந்து உயிரிழந்த சேட், 55, வேலு, 28, ஆகிய இரு ஊழியர்களும் மீட்கப்பட்டனர். படம்: தமிழக ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!