மாணவிக்குத் தாலி கட்டிய மாணவன்; பெற்றோர் அதிர்ச்சி

கட­லூர்: பள்­ளிச் சீரு­டை­யில் இருக்­கும் ஒரு மாண­விக்கு சீரு­டை­யில் இருக்­கும் மாண­வன் ஒரு­வன் பேருந்து நிறுத்­தத்­தில் வைத்து மஞ்­சள் கயிற்­றில் தாலி கட்­டி­யுள்­ளார்.

இந்­தக் காணொளி சமூக வலைத்­த­ளங்­களில் பரவி வரு­வதை அடுத்து பெற்­றோர் அதிர்ச்சி அடைந்­துள்­ள­னர். இதைத்தொடர்ந்து காவலர்கள் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

கட­லூர் மாவட்­டம், சிதம்­ப­ரம் அருகே உள்ள பேருந்து நிலையத் ­தில் இந்­தச் சம்­ப­வம் நடந்­துள்­ளது.

மாணவன் தாலி கட்டுவதை உட­னி­ருந்த மாண­வர்­களில் ஒருவர் ­காணொளி எடுத்­துள்­ளார். அதில், 'கட்­டுயா... கட்­டுயா' என்று மாண­வர்­கள் கூற, அந்த மாண­வ­னும் மாண­விக்குத் தாலி கட்­டி­யுள்­ளார்.

மற்ற மாணவர்கள் பூ போட்டு ஆசிர்வதிப்பதற்கு பதி­லாக காகி­தங்­களைக் கிழித்து இரு­வர் மீதும் வீசு­கின்­ற­னர்.

மாணவி 12ஆம் வகுப்பிலும் தாலி கட்­டிய மாண­வன் தனி­யார் பல­துறை தொழில்­நுட்­பக் கல்­லூ­ரி­யிலும் படித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்­தப் பகு­தியில் அண்­மைக்­கா­ல­மாக இது­போன்ற சம்­ப­வங்­கள் தொடர்ந்து நடை­பெற்று வருவதால் மாண­வர்­க­ளின் எதிர்­கா­லம் கேள்­விக்­கு­றி­யாகி வரு­வ­தாக பொது­மக்­களும் சமூக ஆர்­வ­லர்­களும் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

திரைப்­ப­டங்­க­ளின் தாக்­கத்­தால் தான் இத்­த­கைய போக்கு அதி­க­ரித்து வரு­வ­தாக சமூக ஆர்­வ­லர்­கள் மத்­தி­யில் விமர்சனங்­கள் முன்­வைக்­கப்­படுகின்றன. இதனைத் தடுக்க போதிய விழிப்­பு­ணர்வு ஏற்­படுத்­து­வது அவ­சி­யம் என்­றும் தெரி­விக்­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!