வாரிசு அரசியலை நோக்கி திமுக செல்கிறது: தமிழிசை

சென்னை: வாரிசு அரசியலை நோக்கி திமுக சென்று கொண் டிருப்பதாக தெலுங்கானா ஆளு நரும் புதுவை துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் விமா்சித்துள்ளார்.

சென்னை தரமணியில் நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளா்களிடம் பேசிய தமிழிசை, "ஒரு பெண் பதவிக்கு வருவது என்பது மிகவும் சிரமமான காரியம்தான். கனி மொழிக்கு எனது பாராட்டுகள். ஆனால், அதேவேளையில் அண்ணனுக்கு கட்சியின் தலைவர் பதவி, தங்கைக்கு துணைப் பொதுச்செயலா் பதவி என திமுக வாரிசு அரசியலை நோக்கிச் செல்வதாக பொதுமக்கள் நினைப் பது கண்கூடாகத் தெரிகிறது," என்றார்.

இந்நிலையில், திமுகவின் செய்தித்தொடர்பு இணைச் செய லாளர் ராஜீவ் காந்தி, ஆளுநரின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத் துள்ளார். அவர், தன் டுவிட்டர் பக்கத்தில், "வாரிசு அரசியலை நோக்கி திமுக செல்வதாக தமிழிசை கூறுகிறார். ஆளுநர் பதவியில் இருக்கும் ஒருவர் இப்படிப் பேசலாமா? 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் வாரிசு அரசியல் கூடாது எனச் சொல்லப் படவில்லை. ஆனால், அரசிய லமைப்புச் சட்டத்தின் பிரிவு 163, ஆளுநர் அரசியல் பேசக்கூடாது எனக் கூறியுள்ளது. அதனை மீறாதீர்,'' எனப் பதிவிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!