நன்கொடை கோராமல் மாணவர்களைச் சேர்ப்பதை அரசுகள் உறுதிசெய்ய உத்தரவு

ெசன்னை: பள்ளி, கல்லூரிகளில் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும் நன்கொடைக்கு வரிவிலக்கு பெற முடியாது என்றும் சென்னை உயர் நீதி­மன்­றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறு வனங்கள் மாணவர்களிடம் இருந்து அறக்கட்டளையின் பெயரில் வசூலித்த நன்கொடைகளுக்கு வருமான வரித்துறை ஆணையர் வரி விதித்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் கல்வி நிறுவனங்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்களை விசாரித்த தீர்ப்பாயம், 'அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வரி வசூலிக்கமுடியாது' எனக் கூறி வருமான வரித்துறை ஆணை யரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை ஆணையர் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்குகளை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் கொண்ட அமர்வு விசா ரித்து தீர்ப்பளித்தனர்.

"கல்வி நிறு­வ­னங்­கள் மாண­வர்­க­ளி­டம் நன்­கொடை வசூ­லிக்கத் தடை விதித்­து தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்தச் சட்டவிதிகளை மீறி நன்கொடை வசூலித்ததுடன் அதற்கு வரிவிலக்கு பெறவும் முயற்சி செய்துள்ளனர்," என கண்டனம் தெரிவித்தனர்.

கல்வி நிறு­வ­னங்­கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவித்த நீதிபதிகள், கல்வி நிறு­வ­னங்­கள் நன்­கொடை இல்­லா­மல் மாணவர்களுக்கு சேர்க்கை வழங்­கு­வதை மத்­திய, மாநில அர­சு­கள் உறுதிசெய்­ய ­வேண்­டும் என்­றும் உத்தரவிட்டனர்.

"கல்வி போதித்தல் என்பது ஒரு புனிதமான சேவை," என்று கூறிய நீதிபதிகள், "கல்வியைப் பணம் சம்பாதிக்கும் தொழிலாகப் பார்க்கக்கூடாது. கல்வி நிறுவனங்கள் வசூலிக்கும் நன்கொடைக்கு வருமான வரிச் சட்டத்தின் 11வது பிரிவின்படி வரிவிலக்கு பெறமுடியாது. அந்த நன்கொடைகளுக்கு கட்டாயம் வரி விதிக்கப்படும்," என்று கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!