2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் எழுத்துகள் கொண்ட பானை ஓடு கண்டெடுப்பு

சிவ­கங்கை: தமி­ழ­கத்­தின் காளை­யார்­கோ­வில் பகு­தி­யில் இரண்­டா­யி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முந்­தைய தமிழ் எழுத்­து­கள் பொறிக்­கப்­பட்ட பானை­ஓடு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

பாண்­டி­யன் கோட்டை என்ற இடத்­தில் அந்­தப் பானை­ ஓடு கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தாக சிவகங்கை தொல்­ந­டைக்­குழு நிறு­வ­னர் காளிராசா தெரி­வித்­துள்­ளார்.

இது குறித்து செய்தியாளர்­க­ளி­டம் பேசிய அவர், பாண்­டி­யன் ­கோட்டை பகு­தி­யில் மேற்­ப­ரப்­பில் கிடந்த ஓட்டை எடுத்து சுத்தம் செய்து பார்த்­த­தில் அது இரண்டாயிரம் ஆண்­டு­கள் பழ­மை­யான தமிழ் எழுத்து­கள் பொறிக்­கப்­பட்ட பானை­ ஓடு என்­பது உறுதி செய்­யப்­பட்­டது.

"கீழ­டி­யில் வெட்­டப்­பட்­டுள்ள அகழாய்வுக் குழி­க­ளைப்­போல இங்கும் குழி­கள் உள்­ளன. அதன் இரண்டு புறங்­க­ளி­லும் மண் அடுக்கு­களும் பானை ஓட்டு எச்சங்­களும் உடைந்த நிலை­யில் அரை­கு­றை­யான பானைகளும் காணப்­ப­டு­கின்­றன," என்­றார் காளி­ராசா.

அங்­குள்ள வாய்க்­கா­லில்தான் தமிழ் எழுத்துகள் பொறித்த பானை­ ஓடு கிடைத்­த­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், அந்தப் பானை ஓட்­டில், கறுப்­பி­லும் சிவப்­பி­லும் எழுத்­துப்­பொ­றிப்பு காணப்­ப­டு­கிறது என்­றார்.

மேலும், பானை ஓட்­டின் உட்புறம் முழு­மை­யாக கரிய நிற­மாக உள்­ளது என்று தெரி­வித்­துள்ள காளி­ராசா, இந்த ஓடு ஏழு சென்­டி ­மீட்­டர் அக­ல­மும் ஏழரை சென்­டி­ மீட்­டர் உய­ர­மும் உள்­ள­தாகக் குறிப்­பிட்­டுள்­ளார்.

மோ, ச, ர, ப ஆகிய தமிழ் எழுத்­து­கள் வெளிப்­ப­டை­யாகத் தெரி­வ­தா­க­வும் கூறி­யுள்­ளார்.

"இப்­ப­கு­தி­யில் தமி­ழக அரசு தொல்­லி­யல் துறை முறை­யாக அக­ழாய்வை மேற்­கொண்­டால் காளை­யார்­ கோ­வி­லின் தொன்மையும் பாண்­டி­யர்­க­ளின் கோட்டை கட்­டு­மா­னங்­களும் தமிழகத் தொன்­மை­யும் வெளிப்­படும்," என்­றார் காளி­ராசா.

இதற்­கி­­டையே, பாண்­டி­யன் கோட்­டை­யில் கிடைத்த தமிழ் எழுத்­து பொறித்த பானை ஓட்டை, அதன் தொன்மை, பெருமை, பாது­காப்பு கருதி சிவ­கங்கை அரசு அருங்­காட்­சி­ய­கத்­தில் ஒப்­படைக்க தொல்­ந­டைக்­குழு முடிவு செய்­துள்­ள­தா­க­வும் காளி­ராசா செய்தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், திருச்­செந்­தூர் அருகே உள்ள புன்­னக்­கா­ய­லில் 16ஆம் நூற்­றாண்­டைச் சேர்ந்த அச்ச­கம், பழங்­கால நாண­யங்­களை தமி­ழக தொல்­லி­யல் துறை­யி­னர் கண்­டு­பி­டித்­துள்­ள­னர்.

தொல்­லி­யல்­துறை ஆய்­வாளர் ஆசைத்­தம்பி தலை­மை­யில் புன்னக்­கா­யல் கிரா­மத்­தில் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

மூன்று ஏக்­கர் பரப்­ப­ள­வில் நடை­பெற்ற முதற்­கட்ட ஆய்­வின்­போது 16ஆம் நூற்­றாண்­டைச் சேர்ந்த செப்பு நாண­யங்­கள் கிடைத்­துள்ள­தாக ஆசைத்­தம்பி தெரி­வித்­தார்.

"மேலும், 1578ஆம் ஆண்டு அன்­றிக் அடி­க­ளார் என்­ப­வ­ரால் இன்­றைய கேரள மாநி­ல­மான கொல்லத்­தில் 'தம்­பி­ரான் வணக்­கம்' என்ற முதல் தமிழ் நூல் அச்­சி­டப்­பட்­டது.

"அதே கால­கட்­டத்­தைச் சேர்ந்த அச்­ச­கத்­தின் மிச்­சங்­கள் புன்­னக்­கா­ய­லில் ஆய்­வின்­போது கிடைத்­துள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார்.

அப்பகுதியில் ஆய்வு நீடித்து வரும் நிலையில், சீனா­வில் இருந்து இறக்கு­ம­தி­யான பீங்­கான் பொருள்­க­ளின் மிச்­சங்­கள், புகை பிடிக்­கும் சுஞ்­ஞான் போன்ற பொருள்­களும் இங்கு கிடைத்­துள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!