‘வீட்டில் கிளி வளர்த்தால் ஆறு மாதம் சிறைத் தண்டனை’

கோவை: கோவை மாவட்­டத்­தி­லும் அதன் சுற்­று­வட்­டா­ரப் பகு­தி­க­ளி­லும் வசிக்­கும் மக்­க­ளி­டம் கிளி வளர்ப்பு மோகம் அதி­க­ரித்து வரும் நிலை யில், "வீடு­களில் கிளி வளர்த்­தால் வனச் சட்­டத்­தின்­கீழ் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என வனத்­துறை யினர் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

"கிளி­கள் வளர்ப்­பில் ஆர்­வம் காட்­டு­ப­வர்­க­ளுக்கு ஆறு மாதம் வரை சிறைத்­தண்­டனை வழங்­கப்­படும்,'' என்­றும் அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.

இது­கு­றித்து, கோவை வன அலு­வ­லர் அருண்­கு­மார் கூறுகை யில், "கோவை மாவட்ட வன அலு வல­கத்­தில் பறவை மறு­வாழ்வு மையம் செயல்­பட்டு வரு­கிறது. இங்கு 400க்கும் மேலான பறவை கள் மீட்­கப்­பட்டு பரா­ம­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

"இவற்­றில் வீடு­களில் வளர்க்­கப்­பட்ட 300க்கும் மேலான கிளி­களும் உள்­ளன.

"இது­போல் கிளி­களை வளர்ப்­பது குற்­றம் என்­பதே தங்­க­ளுக்­குத் தெரி­யாது என­வும் கிளி­களை வளர்ப்­ப­வர்­கள் தெரி­விக்­கின்றனர்.

"இனி­வ­ரும் காலங்­களில் மக்­கள் விழிப்­பு­ணர்­வு­டன் இருப்­பது முக்­கி­யம். ஏனெ­னில், கிளி­கள் வளர்ப்­பில் ஈடு­பட்­டால் ஆறு மாதம் வரை சிறைத் தண்­டனை கிடைக்க வாய்ப்­புள்­ளது,'' என்­றார்.

வன உயி­ரின பாது­காப்­புச் சட்­டத்­தின்­படி அழி­வின் விளிம்­பில் உள்ள உயி­ரி­னங்­க­ளின் பட்­டி­ய­லில் நான்­கா­வது இடத்­தில் பச்­சைக் கிளி­கள் இருப்­ப­தா­க­வும் அத­னால் அவற்றை வளர்ப்­ப­தும் விற்­ப­தும் குற்­றம் என்­றும் அருண்­கு­மார் கூறி­னார்.

கோவை­யில் ஒரு ஜோடி கிளி இரண்­டா­யி­ரம் முதல் ஐந்­தா­யி­ரம் ரூபாய் வரை இணை­யம் அல்­லது நேர­டி­யாக விற்­பனை செய்­யப்­பட்டு வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!