கடலோர, தென் மாவட்டங்களில் மூன்று நாள்கள் நீடிக்கும் மழை

சென்னை: வளி­மண்­டல மேல­டுக்­குச் சுழற்சி கார­ண­மாக தமி­ழ­கத்­தின் கட­லோர மாவட்­டங்­கள், தென் மாவட்­டங்­களில் மேலும் மூன்று நாள்­க­ளுக்கு மழை நீடிக்­கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்­ச­ரித்­துள்­ளது.

வட­கி­ழக்­குப் பரு­வ­மழை தொடங்­கி­யது முதல் கடந்த ஒரு சில நாள்­க­ளாக சென்னை உள்ளிட்ட கட­லோர மாவட்­டங்­களில் மழை பெய்து வரு­கிறது.

சென்­னை­யில் நேற்று முன்­தினம் நன்­ளி­ர­வில் மீண்­டும் இடி மின்­ன­லு­டன் கன­மழை வெளுத்து வாங்­கி­ய­போ­தி­லும், இர­வுப்பொழுதையும் பொருட்­ப­டுத்­தா­மல் சென்னை மாந­க­ராட்சி ஊழியர்­கள் பணி­யாற்­றி­னர்.

இதை­ய­டுத்து, தாழ்­வான பகுதி களில் தேங்­கிய மழை­நீர் வெளி யேற்­றப்­பட்­ட­தால் மக்­கள் நிம்­மதி அடைந்­த­னர்.

வானிலை மையம் தொடர்ந்து கன­மழை பெய்­யும் என எச்­ச­ரிக்கை விடுத்த வரு­வதை அடுத்து, சென்னை, திரு­வா­ரூர், மயி­லாடு துறை­யில் பள்ளி, கல்­லூ­ரி­க­ளுக்­கும் தஞ்சை, நாகை­யில் பள்­ளி­க­ளுக்­கும் விடு­முறை அறி­வித்து மாவட்ட ஆட்­சி­யர்­கள் உத்­த­ர­விட்­ட­னர்.

அதே­போல், புதுச்­சேரி, காரைக் காலி­லும் இடை­வி­டாது பெய்த கன­மழை கார­ண­மாக பள்ளி, கல்­லூ­ரி­க­ளுக்கு விடு­முறை விடப்­பட்­டது.

தஞ்சை மாவட்­டம், சீர்­காழி உள்­ளிட்ட டெல்டா பகு­தி­களில் கொட்­டிய கன­மழை கார­ண­மாக ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்­க­ரில் பயி­ரி­டப்­பட்ட சம்பா பயிர்­கள் நீரில் மூழ்­கி­ய­தால் விவ­சா­யி­கள் கவலை அடைந்­துள்­ள­னர்.

வங்­கக்­க­டல் பகு­தி­களில் பலத்த காற்று வீசக்­கூ­டும் என்­ப­தால் மீன வர்­கள் அங்கு செல்­ல­வேண்­டாம் என வானிலை ஆய்வு மையம் அறி­வு­றுத்தி உள்­ளது.

இத­னி­டையே, சென்­னை­யில் தேங்­கிய மழை நீரை துரி­த­மாக வெளி­யேற்­றி­ய­தற்கு தமி­ழக அர சுக்கு தேமு­திக தலை­வர் விஜய காந்த் பாராட்டு தெரி­வித்­துள்­ளார்.

வெள்ள அபாய எச்­ச­ரிக்கை

ஈரோடு மாவட்­டத்­தில் உள்ள பவா­னி­சா­கர் அணை இந்த ஆண்­டில் முதல்­மு­றை­யாக 103 அடியை நெருங்கி வரு­கிறது. இதனால் எந்­நே­ரத்­தி­லும் பவானி ஆற்­றில் இருந்து தண்­ணீர் திறக்கப்­படும் என்­ப­தால், ­கரையோரம் வசிக்­கும் மக்­க­ளுக்கு வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!