பராமரிக்க இயலாது: ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகளைக் கைவிட்ட பெற்றோர்

சேலம்: ஒரே பிர­ச­வத்­தில் பிறந்த மூன்று பெண் குழந்­தை­களை பெற்­றோரே அரசு மருத்­து­வ­ம­னை­யில் விட்­டுச் சென்­றது சேலத்­தில் பரபரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

கடந்த மாதம் அரசு மருத்­து­வக்­கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட பெண் ஒரு­வர், மூன்று பெண் குழந்­தை­க­ளைப் பெற்­றெ­டுத்­தார். அக்­கு­ழந்­தை­கள் எடை குறை­வாக இருந்­த­தால் மருத்து­வ­ம­னை­யி­லேயே சில நாள்­கள் இருக்க வேண்­டும் என மருத்­து­வர்­கள் அறி­வு­றுத்­தி­னர்.

அப்­போது மூன்று குழந்­தை­களைப் பரா­ம­ரித்து, வளர்க்க இய­லாத சூழ்­நி­லை­யில் இருப்­ப­தா­க­வும் அக்­கு­ழந்­தை­களை மருத்­து­வ­மனை நிர்­வா­கமே பரா­ம­ரிக்க வேண்­டும் என்றும் பெற்­றோர் கோரிக்கை விடுத்­த­னர்.

இந்­நி­லை­யில், பதி­னைந்து நாள்­க­ளுக்கு குழந்­தை­க­ளைப் பரா­ம­ரித்த அரசு மருத்­து­வ­மனை மருத்து­வர்­கள், குழந்­தை­க­ளின் எடை கூடி­யதை அடுத்து, அரசு குழந்­தை­கள் பாது­காப்பு அலு­வ­ல­ரி­டம் ஒப்­ப­டைத்­த­னர்.

அடுத்து 60 நாள்­க­ளுக்­குள் பெற்­றோர் மனம் மாறி திரும்பி வந்­தால், மூன்று குழந்­தை­களும் அவர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும் என்­றும் இல்­லை­யெ­னில் விருப்­பம் உள்­ள­வர்­க­ளுக்கு தத்து கொடுக்­கப்­படும் என்­றும் அரசு வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

"மாவட்ட ஆட்­சி­யர் முன்­னி­லை­யில் மூன்று குழந்­தை­களும் பாது­காப்பு அலு­வ­ல­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. பின்­னாள்­களில் பெற்­றோர் அவ­ச­ரப்­பட்டு தவ­றான முடிவு எடுத்­து­விட்­ட­தாக வருந்­தக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவே இரு மாதக் கால அவ­கா­சம் அளிக்­கப்­ப­டு­கிறது," என மருத்­து­வர்­கள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!