செய்திக்கொத்து

இலங்கையில் இருந்து கடத்தி

வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னைக்குக் கடத்தி வரப்பட்ட ரூ.46.25 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இலங்கை இளையர் ஒருவர் கைதானார். தங்கக் கடத்தல் குறித்து நேற்று முன்தினம் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டார் விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜோல்லி. இந்நிலையில், கொழும்பில் இருந்து வந்த விமானப் பயணிகள் வழக்கமான சுங்கச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது இலங்கை இளையரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவரது உடைமைகள் தீவிரமாக சோதிக்கப் பட்டன. அப்போது அவரது பயணப் பெட்டிக்குள் நூதன முறையில் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஒரு கிலோவுக்கும் மேற்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மாயமான மகளை கண்டுபிடிக்கக் கோரி கைபேசி கோபுரம் மீதேறி போராட்டம்

செங்கல்பட்டு: அண்மையில் காணாமல் போன தனது 16 வயது மகளை காவல்துறை கண்டுபிடித்துத் தரக்கோரி 45 வயது ஆடவர் கைபேசி கோபுரம் மீதேறி நின்று உயிரை மாய்த்துக் கொள்வதாக மிரட்டல் விடுத்ததை அடுத்து செங்கல்பட்டில் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள காய்கறிச் சந்தையில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றும் சிவக்குமாரின் மகள் 11ஆம் வகுப்பு படிக்கிறார். அண்மையில் தனது மகள், மனைவியுடன் மதுரைக்குச் சென்றிருந்தார் சிவக்குமார். அப்போது அவரது மகள் திடீரென மாயமானார். இதுகுறித்து புகார் அளித்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சரவணன் புலம்பி வந்தார். இந்நிலையில், செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கைபேசி கோபுரம் மீதேறி நின்று அவர் போராட்டம் நடத்தினார். தன் மகளை கண்டு பிடிக்காவிட்டால் உயிரை மாய்த்துக்கொள்ளப்போவதாக அவர் மிரட்டல் விடுத்தார். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்த பிறகு சமாதானமடைந்த சிவக்குமார் போராட்டத்தைக் கைவிட்டார்.

இலங்கைத் தமிழர்கள் பத்து பேர் தனுஷ்கோடிக்கு வருகை

ராமநாதபுரம்: இலங்கை அரசு கடும் பொருளியல் நெருக்கடியில் சிக்கியுள்ளதை அடுத்து, அங்குள்ள தமிழர்கள் சிலர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இலங்கைத் தமிழர்கள் பத்து பேர் தனுஷ்கோடி வந்தடைந்தனர். மன்னார் பகுதியைச்

சேர்ந்த மூன்று குடும்பங்கள் தனுஷ்கோடி வந்துள்ளன

என்றும் அவர்களிடம் கடலோரப் பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் ஊடகத் தகவல் தெரிவிக்கிறது. ஏற்கெனவே நூற்றுக்கும் மேற்பட்ட

இலங்கைத் தமிழர்கள் இவ்வாறு தனுஷ்கோடிக்கு

வந்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!