60 இளையர்களுக்கு நல்வழிப் பயிற்சி

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக இருந்தது கண்டுபிடிப்பு

கோவை: கோவை மாந­க­ரில் ஐஎஸ் பயங்­க­ர­வாத அமைப்­புக்கு ஆத­ர­வாக இருந்­து­வந்த 60க்கும் மேற்­பட்ட வாலி­பர்­க­ளைக் கண்டறிந்து, அவர்­க­ளுக்கு உல­மாக்­கள், உள­வி­யல் நிபு­ணர்­கள் மூலம் மன­ந­லப் பயிற்சி வழங்கி நல்­வ­ழிப்­ப­டுத்த முடிவு எடுக்­கப்பட்­டுள்­ளது.

கோவை மாந­கர காவல் ஆணை யர் பால­கி­ருஷ்­ணன் தலைமை யிலான குழு­வி­னர் ஐஎஸ் அமைப்­புக்கு ஆத­ர­வாக இருந்து வந்த 60 பேரை மீட்டு நல்­வ­ழிப்படுத்­தும் முயற்­சி­யைத் தொடங்கியுள்­ள­னர்.

"இதற்­கான திட்­டத்­தில் அந்த இளை­ஞர்­க­ளைப் பங்­கு­பெற வைத்து அவர்­க­ளுக்கு நல்ல ஆலோ­ச­னை­க­ளைக் கூறி ஐஎஸ் ஆத­ரவு நிலைப்­பாட்­டில் இருந்து அவர்­களை வெளியே கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளோம்.

"உலமாக்­கள் மூலம் நல்ல அறிவுரைகள் போதிக் கப்பட்டு, அவர்­கள் நல்ல குடிமக­ன்களாக மாற்­றப்­ப­டு­வர்,'' என்று பால கிருஷ்ணன் மேலும் கூறி­யுள்­ளார்.

கோவை மாவட்­டம், உக்­க­டம் அருகே உள்ள கோட்டை ஈஸ்­வ­ரன் கோயில் முன்பு தீபா­வ­ளிக்கு முதல் நாளான 23ஆம் தேதி­யன்று கார் வெடிப்­பில் ஜமேஷா முபின், 28, என்­ப­வர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார்.

இச்­சம்­ப­வம் தொடர்­பில் ஆறு பேர் கைதான நிலை­யில், என்­ஐஏ வசம் இந்த வழக்கு ஒப்­ப­டைக்­கப் ஒப்­ப­டைக்­கப்­பட்டு விசா­ரணை நடந்து வரு­கிறது.

இதற்­கி­டையே, ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்­பின்­பால் ஈடு­பாடு கொண்ட நபர்­கள் குறித்த பட்டி யலை காவ­லர்­கள் திரட்­டி­னர்.

சந்­தே­கப்­ப­டும்­படி உள்­ள­வர்­க­ளின் இல்­லங்­க­ளி­லும் விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­கிறது.

கோவை கார் வெடிப்­புச் சம்­ப­வம் நடந்­தது முதல் மாநி­லம் முழு­வதும் பாது­காப்­பாக இருக்க வாக­னச் சோதனை, முக்­கிய இடங்­களைக் கண்­கா­ணிக்­கும் நட­வ­டிக்­கை­களைக் காவ­லர்­கள் முடுக்­கி­விட்­டுள்­ள­னர்.

உக்­க­டம் சங்­க­மேஸ்­வ­ரர் கோயில், கோனி­யம்­மன் கோயில் உள்­ளிட்ட கோயில்­க­ளி­லும் இப்­போது வரை பாது­காப்­புப் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

உயர் அதிகாரிகளின் உத்தர வுப்படி உளவுத்துறை காவலர்களும் பலரையும் கண்காணித்து வருகின்ற னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!