3,000 டாலருக்கு விற்கப்பட்ட இளைஞர் காவல்துறையில் புகார்

ராம­நா­த­பு­ரம்: கம்­போ­டி­யா­வில் வேலை வழங்­கு­வ­தா­கக் கூறி அங்கு அழைத்துச் சென்று மோசடி வேலை­களில் ஈடு­பட வைத்து சித்­தி­ர­வதை செய்­த­வர்­கள்மீது நட­வடிக்கை எடுக்­கும்படி ராம­நா­த­பு­ரம் காவல்­து­றை­யில் பாதிக்­கப்­பட்ட வாலி­பர் புகார் மனு அளித்­தார்.

ராம­நா­த­பு­ரம் மாவட்­டம், பிர­புக்­களூர் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் நீதிராஜன், 28. டிப்­ளோமா படிப்பை முடித்­துள்­ளார்.

இவரை முகு­கு­ளத்­தூ­ரைச் சேர்ந்த மகா­தீர் முக­மது என்ற முக­வர் கம்­போ­டி­யா­வில் 'டேட்டா என்ட்ரி' வேலை இருப்­ப­தா­கக் கூறி இரண்­டரை லட்­சம் ரூபாய் பணம் பெற்றுக்­கொண்டு சுற்­றுப்­ப­யண விசா­வில் அனுப்­பி­வைத்­தார்.

இந்­நி­லை­யில், கம்­போ­டியா சென்­ற­ பின்­னர்­தான் தன்னை அங்­குள்ள ஒரு சீன நிறு­வ­னத்­தி­டம் 3,000 டால­ருக்கு முகம்­மது விற்­றி­ருப்­பது நீதி­ரா­ஜ­னுக்­குத் ெதரிய வந்­தது.

சாப்­பாட்­டுக்கு வழி­யில்­லா­மல் அடிப்­ப­து, மின் அதிர்ச்சி கொடுப்­ப தைப் பொறுத்­துக்­கொண்டு ஆறு மாதங்­க­ளாக பல்­வேறு துன்­பங்­களை அனு­ப­வித்­து­வந்த நீதி­ரா­ஜன், இந்­திய வெளி­யு­ற­வுத் துறைக்கு மின்­னஞ்­சல் அனுப்­பி­யதை அடுத்து, மீட்­கப்­பட்டு நாடு திரும்­பி­னார்.

தன்னை ஏமாற்­றிய மகாதீர் மீதும் அவரின் தாய் மீதும் நட வடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என ராம­நா­த­பு­ரம் காவல் ஆய்­வா­ள­ரி­டம் நீதி­ரா­ஜன் புகார் அளித்­துள்­ளார்.

இது­கு­றித்து அவர் செய்தி யாளர்­க­ளி­டம் கூறு­கை­யில், "இன்­னும் தமிழ்­நாட்­டில் உள்ள ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் அங்கு மிக­வும் சிர­மப்­பட்டு வரு­கின்­ற­னர். 30 முதல் 40 லட்­சம் கொடுத்­தால்­தான் விடு­விப்­பேன் என்று பய­மு­றுத்­து­கின்­ற­னர்.

"அர­சாங்­கம், இந்­திய தூத­ர­கத்­தின் உத­வி­யால் பாதிப்­பேர் மீட­கப்­பட்­டுள்­ள­னர். இன்­னும் பாதிப் பேர் அங்கு தவிக்­கின்றனர்.

"இந்த உண்மை நில­வ­ரம் தெரி­யா­மல் இன்­னும் பலர் அங்கு சென்று கொண்­டு­தான் உள்­ள­னர். என்­னைப்­போல் அங்கு சென்று சிக்­கிக்­கொள்­ளா­தீர்­கள்.

"நீங்­கள் இது­வரை படாத துன்­பத்தை எல்­லாம் அங்கு போய் அனு­ப­விக்க நேரி­டும், எனவே அங்கு போகா­தீர்­கள்," என எச்­ச­ரித்­துள்­ளார் நீதிராஜன்.

அங்­கி­ருந்து நான் இங்கு வரு­வதற்­குக்­கூட திரும்­ப­வும் என் பெற்­றோர் ஒன்­றரை லட்­சம் பணம் கட்­டித்தான் வந்துள்ளேன் என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!