2,000 பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார்நிலை பருவமழை: இவ்வாண்டு 26 பேர் பலி; பல்லாயிரக்கணக்கான விளைநிலங்கள் பாதிப்பு

சென்னை: வங்­கக்­க­ட­லில் வரும் 9ஆம் தேதி காற்­ற­ழுத்த தாழ்­வுப் பகுதி உரு­வாக வாய்ப்­புள்­ள­தாக வானிலை ஆய்வு மையம் அறி­வித்துள்ள நிலை­யில், ஏறக்­கு­றைய 2,000 பேரி­டர் மீட்­புப் படை வீரர்­கள் தயார்­ நி­லை­யில் இருப்­ப­தாக தமி­ழக வரு­வாய், பேரி­டர் மேலாண்மை ஆணை­ய­கம் தெரி­வித்­துள்­ளது.

எந்த ஒரு பேரி­ட­ரையும் சமா­ளிக்­கும் வகை­யில் 1,149 தேசிய பேரி­டர் மீட்­புப் படை­யி­னர், 899 தமிழகப் பேரி­டர் மீட்­புப் படை­யி­னர் என மொத்­தம் 2,048 வீரர்­களும் 5,093 நிவா­ரண முகாம்­களும் தயார் நிலையில் உள்­ள­தாக ஆணை­யகம் வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில் குறிப்­பிடப்பட்­டுள்­ளது.

அண்­மைய சில நாள்­க­ளாக வட­ கி­ழக்­குப் பரு­வ­ம­ழையால் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டு வரும் நிலையில், இதற்கு ஒரு தீர்வு காண எடுக்­கப்­பட வேண்­டிய முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் குறித்து திரு.­வி.க. நகர் மண்­டல அலு­வ­ல­கத்­தில் மழை­நீர் வடி­கால் பணி­கள் குறித்து அற நிலை­யத் துறை அமைச்­சர் சேகர் பாபு தலை­மை­யில் ஆலோ­ச­னைக் கூட்­டம் நடை­பெற்­றது.

அதன்­பி­றகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய சென்னை மேயர் பிரியா, வட­கி­ழக்­குப் பரு­வ­ம­ழையை எதிர்­கொள்ள அனைத்து ஏற்­பா­டு­களும் தயார்­நி­லை­யில் உள்­ள­தாகத் தெரி­வித்தார்.

"கடந்த ஆண்டு வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­பட்டு மழை­நீர் வடி­கால் பணி­கள் நடந்து வரு­கிறது," எனக் கூறி­ய­வர், "இந்த மழைக்­காலத்­தில் மக்­க­ளுக்கு முக்­கியத் தேவை­யாக இருக்­கும் உணவை எந்த இடத்­தில், எந்த அள­வுக்குத் தயா­ரிக்­க­வேண்­டும் என்­பது குறித்து அறி­வு­றுத்தி உள்­ளோம்.

"அத்­து­டன், மருத்­துவ முகாம்­கள் நடத்தவும் அதற்­குத் தேவை­யான மருத்­து­வர், தாதி­களை நிய­மிக்­க­வும் அறி­வு­றுத்தி உள்­ளோம்," என்று கூறி­னார்.

தமி­ழ­கத்­தில் பர­வ­லாக பெய்து வரு­ம் பருவமழை காரணமாக, சென்னையில் இரு­வரும் திரு­வா­ரூர் மாவட்­டத்­தில் ஒரு­வரும் என மூவர் இறந்துள்ளனர். இவர்களை யும் சேர்த்து, இவ்வாண்டில் மொத்­தம் 26 உயி­ரி­ழப்­பு­கள் பதி­வாகி உள்ள நிலை­யில், இறந்தவர்களின் குடும்­பத்­திற்கு ரூ.4 லட்­சம் நிவா­ர­ணம் வழங்க நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு உள்­ளது.

மேலும், 25 கால்­ந­டை­கள் இறந்­துள்­ள­தாகவும் 140 குடி­சை­களும் வீடு­களும் சேதம் அடைந்­துள்­ள­தாகவும் மாநி­லப் பேரி­டர் அபாய குறைப்பு முகமை தெரி­வித்­துள்­ளது.

ராமநாதபுரம் மாவட்டம், உடைகுளம், சாம்பக்குளம் பகுதிகளில் 240 ஏக்கரிலுள்ள பயிர்கள் வைகையில் இருந்து திறக்கப்பட்ட நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் அதனை கையில் எடுத்துக் காட்டுகின்றனர். டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக 50,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!