ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டு சிலைகள் கண்டெடுப்பு

சிவகங்கை: மானா­ம­துரை அருகே உள்ள கிள்­ளுக்­குடி கிரா­மத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வு நட­வ­டிக்­கை­யின்­போது ஆயி­ரம் ஆண்­டு­கள் பழமை வாய்ந்த மகா­வீ­ரர் சிற்­பங்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தா­க­வும் அக்கா­ல­கட்­டத்­தில் மத­நல்­லி­ணக்­கம் பேணப்­பட்­டது என்­ப­தற்­கான சான்­றாக இச்­சி­லை­கள் உள்­ளன என்றும் ஆய்­வா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­களில் தொல்­லி­யல் துறை­யி­ன­ரும் சமூக ஆர்­வ­லர்­களும் பல்­வேறு ஆய்­வு­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.

இதன் மூலம் கீழ­டி­யைப் போன்று மேலும் பல இடங்­களில் அரிய பொருள்­கள் கிடைத்து வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், சிவ­கங்கை மாவட்­டம், மானா­ம­துரை அருகே ஆயி­ரம் ஆண்­டு­கள் பழ­மை­யான மகா­வீ­ரர் சிற்­பங்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. பாண்­டி­ய­நாடு பண்­பாட்டு மையத்தைச் சேர்ந்த மீனாட்சி ­சுந்­த­ரம் உள்­ளிட்­டோர் ஆய்­வில் ஈடு­பட்­ட­போது இந்­தச் சிற்­பங்­கள் கிடைத்­தன.

"இரு மகா­வீ­ரர் சிற்­பங்­க­ளைக் கண்­டெ­டுத்­தோம். இவை ஒன்­பதாம் நூற்­றாண்­டைச் சேர்ந்­தவை. அக்­கா­லத்­தில் இந்­தப் பகுதி முற்­கால பாண்­டி­ய­ரின் ஆட்­சி­யின் கீழ் இருந்த பகு­தி­யா­கும்.

"இந்த பகு­தி­யில் சமண சிற்­பம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளதை பார்க்­கும்­போது அக்­கால மன்­னர்­கள் மத நல்­லி­ணக்­கத்தை பேணி­யுள்­ள­னர் என்­பது தெளி­வா­கிறது.

''இரண்டு மகாவீரர் சிற்பங்களில் ஒன்று இரண்டரை அடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

"இது சமணர்களின் 24வது தீர்த்தங்கரரான மகாவீரர் சிற்பமாகும். சிற்பத்தின் அடிப்பகுதியில் மகாவீரருக்கே உரிய சிம்மம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த பீடத்தில் மூன்று சிம்மங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

"இப்பகுதியில் மேலும் விரிவாக ஆய்வு மேற்கொண்டால் பயனுள்ள தகவல்கள், அரிய பொருள்கள் கிடைக்கும்," என மீனாட்சி சுந்­த­ரம் தெரி­வித்­துள்­ளார்.

படம்: தமிழக ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!