முபின் பலருடன் தொடர்பு: காவல்துறை விசாரணை

கோவை: கார் வெடிப்புச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஜமேஷா முபின் கைபேசி செயலி மூலம் வெளிநாடுகளைச் சேர்ந்த பலரிடம் பேசியதாக காவல்துறை சந்தேகிக்கிறது.

தனது கூட்டாளிகளுடன் அவர் அந்தச் செயலியைப் பயன்படுத்தி பேசி வந்ததை காவல்துறை உறுதிசெய்துள்ளது.

கார் வெடிப்பு சம்ப வத்தின்போது, முபின் வைத்திருந்த ஒரு கைப்பேசி உடைந்து நொறுங்கியதாகவும் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ஒரு கைப்பேசியும் அவரது கூட்டாளிகளிடம் இருந்து சில கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள் ளது. அவற்றை ஆராய்ந்த போது முபின் தனது கூட்டாளிகளுடன் கைப்பேசி செயலியை பயன்படுத்தி பேசிவந்தது உறுதியானது.

இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் உள்ள வர்களுடனும் இந்தச் செயலியை பயன்படுத்தி அவர் பேசியதாக நம்பப்படுகிறது.

இதையடுத்து அவர் யார், யாருடன் பேசினார் என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, கோவை கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் இணையம் வழி வெடிபொருள்களை அதிக அளவில் வாங்கியவர்கள் குறித்தும் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக ஒரு பட்டியலை தயாரித்து, அதன்படி விசாரணை நடத்தப்படுவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முபின் தன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 75 கிலோ வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, வெடிபொருள் வாங்கியோர் பட்டியல் தயாராகி உள்ளது.

இந்நிலையில் இணையம் வழி பொருள்களை விற்க உடனடியாக தடைவிதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!