தமிழகத்தில் 3,808 நூலகங்களை சீரமைக்க ரூ.84 கோடி ஒதுக்கீடு

தர்­ம­புரி: தமி­ழ­கம் முழு­வ­தும் உள்ள 3,808 நூல­கங்­கள் விரை­வில் சீர­மைக்­கப்­படும் என தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது.

இந்­நூ­ல­கங்­களில் அடிப்­படை வச­தி­கள் குறை­வின்றி செய்­யப்­படும் என்­றும் இதற்­காக ரூ.84 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது என்­றும் நூல­கப் பிரிவு அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் வாசிப்புப் பழக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் அதிக எண்­ணிக்­கை­யி­லான நூல­கங்­கள் செயல்­பட்டு வரு­கின்­றன. மாநி­லம் முழு­வ­தும் 12,525 நூல­கங்­கள் உள்­ளன. அவற்­றில் ஏரா­ள­மான நூல்­கள் வைக்­கப்­பட்­டுள்­ளன.

எனி­னும் நூல­கங்­களில் போது­மான வசதி­கள் செய்­து தரப்­ப­ட­வில்லை என்று பல்­வேறு தரப்­பினரும் ஆதங்­கம் தெரி­வித்து வரு­கின்­றனர். இந்­நி­லை­யில், தமி­ழக நூல­கங்­களில் மூத்த குடி­மக்­கள், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் எளி­தில் வந்து செல்­லும் வகை­யில் சாய்வுத் தளம், கழி­வ­றை­கள் கட்­டப்­படும் என­வும் பழு­த­டைந்த கட்­ட­டங்­கள் சீர­மைக்­கப்­படும் என­வும் அரசு அறி­வித்­துள்­ளது.

நூல­கங்­க­ளுக்கு புதிய புத்­த­கங்­கள், மேசை, நாற்­காலி உள்­ளிட்ட பொருள்­கள் வாங்­கப்­படும் என­வும் கடந்த 2021 ஆகஸ்ட் 24ஆம் தேதி சட்­டப்­பே­ர­வை­யில் அரசு தெரி­வித்­தது.

இதை­ய­டுத்து மாநி­லம் முழு­வ­தும் உள்ள நூல­கங்­களில் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­ட­தில், 3,808 நூலகங்­கள் உட­ன­டி­யாக சீர­மைக்க வேண்­டிய நிலை­யில் இருப்­பது தெரி­ய­வந்­தது.

"எனவே அனைத்து கிராம அண்ணா மறு­ம­லர்ச்சி திட்­டத்­தின் கீழ் 3,808 நூல­கங்­களும் ரூ. 55 கோடியே 71 லட்­சத்­தில் சீர­மைக்­கப்­பட உள்­ளன.

ஒவ்­வொரு நூல­கத்­துக்­கும் ரூ. 25 ஆயி­ரம் மதிப்­பீட்­டில் நாற்­காலி, மேசை­கள் போன்ற தள­வாடப் பொருள்­கள் வாங்க, ரூ.9.51 கோடி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது என்றும் ஒவ்­வொரு நூல­கத்­துக்­கும் புதுப் புத்­த­கங்­கள் வாங்க தலா ரூ. 51,000 ஒதுக்­கப்­படும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புத்தகங்கள் வாங்குவதற்கு மட்டுமே ரூ.19.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!