ஏழு மாதங்கள்; 1,400 குழந்தைகள்: தாய்ப்பால் தந்த 29 வயதுப் பெண்

சென்னை: ஏழு மாதங்­களில் 1,400 பச்­சி­ளம் குழந்­தை­க­ளுக்கு தாய்ப்­பால் ஊட்டி தாய்­மை­யின் மேன்­மையை உணர்த்தி உள்­ளார் கோவை­யைச் சேர்ந்த சிந்து.

29 வய­தான அவர் 50 ஆயிரம் மில்லி தாய்ப்­பாலை சேக­ரித்து தாய்ப்­பால் வங்கி மூலம் வழங்கி உள்­ளார். அவ­ரது பெயர் ஆசிய, இந்­திய சாத­னைப் புத்­த­கங்­களில் இடம்­பெற்­றுள்­ளது.

தமி­ழ­கத்­தில் 2014ஆம் ஆண்டு 'ஹ்யூ­மன் மில்க் பேங்க்' திட்­டம் எனும் 'தாய்ப்­பால் வங்கி' அறி­முகப்­படுத்­தப்­பட்­டது. பல்­வேறு கார­ணங்­களால் தாய்ப்­பால் கிடைக்­காத குழந்­தை­க­ளுக்கு இந்த வங்கி மூலம் சேக­ரிக்­கப்­பட்ட தாய்ப்­பால் அளிக்­கப்­ப­டு­கிறது.

குழந்­தை­கள் தாய்ப்­பால் இன்றி தவிப்­புக்கு ஆளாகக்­கூ­டாது என்­பதை மன­திற்­கொண்டு, கோயம்­புத்­தூ­ரின் கனி­யூரைச் சேர்ந்த இல்­லத்­த­ர­சி­யான சிந்து கடந்த ஏழு மாதங்­க­ளாக தாய்ப்­பாலை சேக­ரித்து கோவை அரசு மருத்து­வ­மனைக்கு அமிர்­தம் தாய்ப்­பால் தானம் எனும் தனி­யார் தொண்டு நிறு­வ­னம் மூல­மாக கொடுத்து வந்­துள்­ளார். இந்­நி­லை­யில் கடந்த சில நாள்­களுக்கு முன்பு ஆசிய மற்­றும் இந்­திய சாதனை புத்­த­கத்­தில் இவர் இடம்பிடித்­துள்­ளார்.

''தாய்ப்­பால் தானம் வழங்­கு­வ­தில் எனக்கு முது­கெ­லும்­பாக இருந்­தது என் கண­வர்தான். அவ­ருக்குத்தான் நன்றி சொல்ல வேண்­டும்.

"எனக்கு பிறந்து 19 மாதமே ஆன பெண் குழந்தை உள்­ளது. மகள் வெண்­பா­வுக்­குப் புகட்டியது­போக, தாய்ப்­பால் இன்­றித் தவிக்­கும் குழந்தை­க­ளுக்­காக தனி­யார் தொண்டு நிறு­வ­னத்­தின் அறி­வுறுத்­த­லின்­படி தாய்ப்­பாலை சேமித்­தேன்.

"பின்­னர் சேமித்து வைத்த தாய்ப்­பாலை வாரந்­தோ­றும் தாய்ப்­பால் வங்கி­யில் ஒப்­ப­டைத்­து­வி­டு­வேன். பல பச்­சி­ளம் குழந்­தை­கள் பயன்­பெ­றும் இந்தச் சேவையை மகிழ்ச்­சி­யு­டன் செய்து வரு­கி­றேன்," என்­கி­றார் சிந்து.

சென்னை, போரூர் பகு­தி­யைச் சேர்ந்த 26 வயது திவ்யா என்­ப­வ­ரும் கடந்த 15 மாதங்­க­ளா­கத் தாய்ப்­பால் தானம் வழங்கி வரு­கி­றார்.

இது­வரை அவர் 10 ஆயி­ரம் மில்லி தாய்ப்­பாலை தான­மாக வழங்­கி­யுள்­ளார். இருவருக்கும் பல்வேறு தரப்பினர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், பல தாய்மார்கள் தாய்ப்பால் இன்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் தர முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!